சோயா சங்ஸ் வெஜ் பிரியாணியை உதிரி உதிரியாக அருமையான சுவையில் இப்படி ஒருமுறை செய்து பாருங்களேன்!!

இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அ

By Ramya · 27/9/2023

இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல.

சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. நான் வெஜ் சாப்பிடாத, காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே வெஜிடபிள் பிரியாணி ஆகும். இது பல வகையான காய்கறிகள் அரிசி மற்றும் மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

பிரியாணியில் பலவகை உண்டு. அதில் இன்று நாம் காண இருப்பது சோயா சங்க் பிரியாணி. இவை ஒரு கலக்கலான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. அது மட்டுமின்றி சோயா சங்குகளில் உடம்புக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதித அளவு இருப்பதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது. இவை செய்வதற்கு சிறிது நேரம் பிடித்தாலும் இதனின் செய்முறை மிகவும் சுலபமானது தான். விசேஷ நாட்கள், பிறந்த நாட்கள், அல்லது விருந்துக்கு உறவினர்கள் வீட்டுக்கு வரும் பட்சத்தில் வழக்கமாக செய்து பரிமாறப்படும் பிரியாணி மற்றும் ஃப்ரைட் ரைஸ்களுக்கு பதிலாக இந்த சோயா சங்க் பிரியாணியை பரிமாறி அசத்தலாம்.

Recipes AMP · Quick view
View full