சோயா ஒயிட் சால்னா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

பரோட்டா பூரி சப்பாத்திக்கு நல்ல காரசாரமா சால்னா வச்சு சாப்பிட்டிருப்பீங்க பெரும்பாலும் பரோட்டாவுக்கு தான் நம்ம சால்னா வச்சு சாப்பிடுவோம். ஆனா இட்லி, தோசை, சப்பாத்தி பூரிக்கு எல்லாத்துக்குமே சால்னா வச்சு சாப்பிட்டா ரொம்பவே அற்புதமான டேஸ்ட்ல இருக்கும். அந்த வகையில எப்பவுமே காரசாரமா

By Prem Kumar · 7/9/2025

பரோட்டா பூரி சப்பாத்திக்கு நல்ல காரசாரமா சால்னா வச்சு சாப்பிட்டிருப்பீங்க பெரும்பாலும் பரோட்டாவுக்கு தான் நம்ம சால்னா வச்சு சாப்பிடுவோம். ஆனா இட்லி, தோசை, சப்பாத்தி பூரிக்கு எல்லாத்துக்குமே சால்னா வச்சு சாப்பிட்டா ரொம்பவே அற்புதமான டேஸ்ட்ல இருக்கும். அந்த வகையில எப்பவுமே காரசாரமா செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு தடவை ஒயிட் சால்னா செஞ்சு பாருங்க. இன்னைக்கு நம்ம இதுல சோயா மற்றும் பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யப் போறோம். ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் எல்லார் வீட்லயும் இருக்கக்கூடிய சோயாவையும் பச்சைப் பட்டாணியையும் வைத்து இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யலாம்.

இதுக்கு தக்காளி கூட தேவைப்படாது. ஆனால் டேஸ்ட் அவ்ளோ அற்புதமா இருக்கும் குழந்தைகளுக்கு தாராளமா இதை சாப்பிட கொடுக்கலாம். கடையிலிருந்து பரோட்டா வாங்கிட்டு வந்து வீட்டிலேயே இந்த சால்னா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுத்தால் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி காரம் அதிகமாக இல்லாத இந்த ரெசிபி கண்டிப்பா வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுங்க.

தக்காளி சாதம், புலாவ், வெஜிடபிள் பிரியாணி இதுக்கும் இந்த சால்னா ரெசிபி ரொம்பவே அற்புதமாக இருக்கும் கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. இதுல நம்ம பால் சேர்த்து செய்ய போறோம் அதனால நல்லா கிரீமியா சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இந்த டேஸ்ட்டான அற்புதமான சோயா ஒயிட் சால்னா எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதனையும் படியுங்கள் : சுவையான ரோட்டு கடை சைவ சால்னா செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full