காரசாரமான குடைமிளகாய் பொரியல் இப்படி செய்து பாருங்கள்! சுடு சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!
குழந்தைகள் உணவு விஷயத்தில் மட்டும் ஒரே மாதிரியாகத் தான் காய் கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு பிடித்த உணவு என்றால் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். பிடிக்காத உணவு என்றால் அது ஆரோக்கியமானது என்று நாம் சொன்னாலும் கூட அதனை காதில் வாங்காமல் வேண்டாம் என்று அடம் பிடிப்பார்
குழந்தைகள் உணவு விஷயத்தில் மட்டும் ஒரே மாதிரியாகத் தான் காய் கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு பிடித்த உணவு என்றால் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். பிடிக்காத உணவு என்றால் அது ஆரோக்கியமானது என்று நாம் சொன்னாலும் கூட அதனை காதில் வாங்காமல் வேண்டாம் என்று அடம் பிடிப்பார்கள். குழந்தகளுக்கு துரித உணவு மிகவும் பிடிக்கிறது அதில் சேர்க்க படும் குடைமிளகாய் வைத்து பொரியல் செய்தால் அருமையாக இருக்கும்.
குழந்தைகள் விருப்பமாக சாப்பிடக்கூடிய குடைமிளகாயில் , பொரியல் செறிந்து கொடுத்து பாருங்கள்,அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்., . குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது.
தினமும் காலை விடிந்தால் போதும், சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒரு குழம்பு, பொரியல் என்று தவறாமல் செய்து வைப்பது பெண்களின் கடமையாக இருக்கும். அவ்வாறு தினமும் ஒரு குழம்பு, காய் செய்வதில் சற்று குழப்பமான நிலையில் தான் பெண்கள் இருக்கின்றனர்.
புதுவிதமான சுவையை ட்ரை செய்வதென்பது வழக்கமான விஷயம் தான். அதேபோல் குடைமிளகாய் வைத்து இந்த பொரியல் எப்படி செய்ய வேண்டும் என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதனையும் ஒரு முறை செய்து பாருங்கள். அவ்வளவு அசத்தலான சுவையில் இருக்கும்
இதையும் படிங்கள் : குடைமிளகாய் வெஜ் ஆம்லெட் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் மொத்தமாக காலியாகவிடும்!