கீரை வைத்து மொறு மொறுனு கீரை கபாப் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசிதான்!
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த ரெஸ்டாரஸ்ட் ஸ்டைல் கீரை கபாப் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமி
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த ரெஸ்டாரஸ்ட் ஸ்டைல் கீரை கபாப் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு வீட்டில் உள்ளோரிடம் பாராட்டை வாங்க வேண்டுமானால், மாலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது கீரை கபாப் செய்து கொடுங்கள். காய்கறி, கீரை போன்றவையும் ஆரோக்கியத்திற்கு அவசியம் தானே! சொல்வது ஈஸி, சாப்பிடுவதும் சாப்பிட வைப்பதும் சற்று கடினம் தான்.புரிகிறது! அசைவ உணவு பிரியர்கர்களுக்கு மட்டுமே இந்த மனக்கவலை புரியும். உணவை ரசித்து உண்ணும் நீங்கள் பாக்கியசாலிகள். கவலை, துக்கம், சண்டை மற்றும் மன கவலையை விரட்ட எளிய வழி உணவு. சாப்பிட்டாலும் சரி, நமக்கு பிடித்தவர்களுக்கு சமைத்து பரிமாறினாலும் சரி உணவு ஆத்மார்த்தமான மகிழ்ச்சியை கொடுக்கும்.
மனதும், வயிறு நிறைந்தால் கவலை எல்லாம் பறந்தோடி விடும். ஆனால் வாரத்தின் எல்லா நாட்களிலும் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது. கவலையை விடுங்க, இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள கீரை கபாப் ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். இதன் மணமும் சுவையும் நிச்சயமாக அசைவ உணவை விட தரமாக இருக்கும். கடையில் வாங்கி சாப்பிட்ட கபாபை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வாரத்துக்கு ஒரு முறை வல்லாரை கீரை கூட்டு இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க ஞாபக சக்தி இரண்டு மடங்காகும்!