அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அண்ணாசி பூ
நாம் ஒரு சில சூழ்நிலைகளில் நமக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று கூறி இருப்போம் நாம் ஒரு விஷயத்தை செய்வதற்கு பல முயற்சிகளை கையாண்டும் அந்த விஷயம் நமக்கு கிடைக்காமல் போயிருக்கும் அல்லது வெற்றியில்லாமல் போயிருக்கும் அந்த நேரத்தில் நமக்கு அதிர்ஷ்டமே இல்லை என்ற ஒரு எண்ணம் தோன்றும் அந்த மாதிர
நாம் ஒரு சில சூழ்நிலைகளில் நமக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று கூறி இருப்போம் நாம் ஒரு விஷயத்தை செய்வதற்கு பல முயற்சிகளை கையாண்டும் அந்த விஷயம் நமக்கு கிடைக்காமல் போயிருக்கும் அல்லது வெற்றியில்லாமல் போயிருக்கும் அந்த நேரத்தில் நமக்கு அதிர்ஷ்டமே இல்லை என்ற ஒரு எண்ணம் தோன்றும் அந்த மாதிரியான எண்ணம் தோன்றினால் நமக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும் வாய்ப்புள்ளது. ஜோதிடரீதியாக நம்முடைய ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு சாதகமாக இல்லாத சூழலில் அதிர்ஷ்டம் இல்லாமல் போகும் அந்த அதிர்ஷ்டத்தை பெறுவதற்கும் நம்மிடம் உள்ள துரதிஷ்டத்தை விரட்டுவதற்கும் எளிமையான பல பரிகாரங்கள் உள்ளது அந்த வகையில் அதிர்ஷ்டத்தை நமக்கு அள்ளித் தர போகும் ஒரு எளிமையான பரிகாரத்தைப் பற்றி பார்க்கலாம்.
அண்ணாசி பூ
வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய அண்ணாச்சிப்பூ தான் இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான ஒரு பொருள். நம் வீட்டில் இருக்கக்கூடிய ஏலக்காய் கிராம்பு இவை இரண்டும் மகாலட்சுமிக்கு உரிய பொருட்களாக கருதப்படுகிறது அதை போல் தான் அண்ணாச்சி பூவும் மகாலட்சுமி தேவிக்குரிய பொருள். அண்ணாச்சி பூவே முறையாக நாம் பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
அண்ணாச்சி பூ பரிகாரம்
இந்த குறிப்பிட்ட பரிகாரத்திற்கு நமக்கு உடையாத நல்ல அண்ணாச்சி பூ தேவைப்படும். சிவப்பு நிற நூலை எடுத்து அந்த அண்ணாச்சி பூவில் சுற்றி கட்டிக் கொள்ள வேண்டும் ஒரு நாள் முழுவதும் அதனை சூரிய வெளிச்சம் படும்படி வைக்க வேண்டும் அடுத்த நாள் காலையில் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பட்டுத்துணியில் அதனை வைத்து மடித்து பணம் வைக்கக்கூடிய மணி பர்ஸில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் நம்மிடம் உள்ள அதிர்ஷ்டத்தை விரட்டி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தலாம் அதிர்ஷ்டம் ஏற்படுவதன் மூலம் நமக்கு பண வரவுகளுமே அதிகரிக்கும். அனைத்து காரியங்களிலும் நமக்கு வெற்றி கிடைக்கும் துரதிஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் கிடைக்க இந்த அண்ணாச்சி பூ பரிகாரத்தை முழுமனதோடு செய்து பாருங்கள்