செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பர வழக்கையை அளித் தரும் சுக்கிரன் தனது ராசியை மாற்றி தற்போது மிருகசீரிஷம் நட்சத்திருக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடும். செல்வத்தின் அதிபதியான சுக்கிரன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். காதல், செல்வம் மற்றும் பொருள் வசதிகளை அள்ளித் தரும் சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஜோதிட நிகழ்வாகும்.

ஏனெனில் சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அந்த வகையில் சுக்கிரன் ஜூன் 7ம் தேதி காலை 8.25 மணிக்கு மிருகசிர நட்சத்திரத்திற்கு மாறுகிறார். எனவே சுக்கிரனின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பை தரும் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்கு அதிபர் தான் சுக்கிரன். சுக்கிரன் சஞ்சாரம் ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டத்தை வழங்கப்போகிறது. இதுநாள்வரை உங்களுக்குத் தடைபட்டிருந்த காரியங்கள் மளமளவென முடியும். புதிய வேலை கிடைக்கும் உற்சாகமாக இருப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். உங்களின் அன்பிற்குரியவர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. பணியிடத்தில் சாதகமான செல்வாக்கு உண்டு. வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். வியாபாரிகள் அதிக வெற்றி பெறுவார்கள்.
மிதுனம்

மிதுன ராசியினருக்கு சுக்கிரன் செல்வத்தையும், செழிப்பையும் தருகிறார். பண வரவு அற்புதமாக இருக்கும். உங்க சொல் வெல்லும் சொல்லாக இருக்கும். பிறரது மனதை கவரும் வகையில் பேசுவீர்கள். திடீர் தன யோகம் வரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். விலை உயர்ந்த பரிசுப்பொருள் உங்கள் வீடு தேடி வரும். கடன் தொல்லை நீங்கி நிதி நிலை வலுப்பெறும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
கன்னி

சுக்கிரன் சஞ்சாரத்தால் கன்னி ராசிக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படும். காதல் துணையுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். பெண்களுக்கு பொன் நகைகள் சேர்க்கை அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழிலில் முதலீடு செய்வது நன்மை தரும். மேலும், நீங்கள் பந்தயம் அல்லது பங்குச் சந்தையில் பணத்தை வைக்க திட்டமிட்டால், இந்த காலகட்டத்தில் அதைச் செய்வது நன்மை பயக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.
கும்பம்

சுக்கிரன் சஞ்சாரம் கும்ப ராசியினருக்கு சுப பலனை கொடுக்கும். இதன் மூலம் நீங்கள் அதிக இன்பத்தை அனுபவிப்பீர்கள். குழுப்பணியில் பணிபுரிவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். சேமிப்பிலும் வெற்றி பெறலாம். மேலும், இந்த காலகட்டத்தில் முதலீடு நன்மை பயக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். அதுமட்டுமல்லாமல் சக ஊழியர்களுடன் நன்றாகப் பழகுவீர்கள். உயர் அதிகாரிகளின் உதவியால் இலக்கை அடைவீர்கள். இதனுடன் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனையும் படியுங்கள் : குருவால் அடுத்த ஜூன் மாத 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்


