குருவால் அடுத்த ஜூன் மாத 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்

- Advertisement -

ஜூன் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி நடக்க உள்ளன. இதில் முக்கிய அம்சமாக குரு பகவான் மற்றும் செவ்வாய் ஆட்சி பெற்று அமர உள்ளனர். ஜூன் மாத தொடக்கத்தில் சூரியன், குரு, சுக்கிரன், புதன் ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கை ரிஷப ராசியில் நடக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஜூன் மாத முதல் தேதியில் மேஷ ராசி அதிபதியான செவ்வாய் பகவான், மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகி ஆட்சி அதிபதியாக சஞ்சரிக்க உள்ளார். அதேபோல சனி பகவான் கும்ப ராசி ஆட்சி பெற்று சஞ்சரித்து வருகிறார். இதன் காரணமாக சிலர் தங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க நேரிடும். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

ரிஷபம்

குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். முன்னேற்றம் தருவார். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். ஜூன் மாதத்தில் பொருளாதார நிலை வலுவடையும் அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இந்த நேரத்தில் நிதி நெருக்கடி நீங்கும். பணவரவு தாராளமாகும். நினைப்பதை செய்து முடிப்பீர்கள். சுபநிகழ்ச்சி நடக்கும். வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அஷ்டம ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் செல்வாக்கு உயரும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும்.

- Advertisement -

சிம்மம்

குருவின் பார்வை உண்டாவதால் பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். குலதெய்வ அருள் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். வருமானம் அதிகரிக்கும், இதனால் வங்கி இருப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். ஜூன் மாதத்தில் உங்கள் புகழும் பெருமையும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவுக்கு வரும். எதிரிகள் விலகிச் செல்வர்.‌‌ தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும்.

கன்னி

இந்த நேரத்தில் உங்கள் சம்பளமும் அதிகரிக்கலாம். இதனால் சேமிப்பும் அதிகரிக்கும். வியாபாரம் செய்தால் அதிலும் லாபம் கிடைக்கும். அதே சமயம், சொத்து வாங்கும் எண்ணத்தில் இருந்தால், உங்கள் மனதின் இந்த ஆசையும் விரைவில் நிறைவேறும். குழப்பம் தீரும். உடல் பாதிப்பு விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். பொன், பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த ஊதியம் உண்டாகும். திறமைக்கேற்ற பொறுப்பு கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைப்பட்ட பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும்.

தனுசு

இந்த காலகட்டத்தில், ஒரு பெரிய ஒப்பந்தம் செய்யப்படலாம், இது உங்கள் அதிர்ஷ்டத்தையும் மாற்றும். வேலை செய்பவர்கள் தங்கள் விருப்பப்படி வேலை வாய்ப்பைப் பெறலாம். உங்கள் சம்பளம் உயரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சி நடந்தேறும். படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விரும்பிய பாடம், கல்லுாரியில் இடம் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உயரும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : கிருத்திகையில் புதன் பெயர்ச்சி இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!