மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். வணிகம், ஞானம், பேச்சு, காதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் அதிபதியான புதன், மே 29, 2024 அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைய இருக்கிறார். புதனின் ராசி மாற்றம் 7 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தப் போகிறது. அது யார் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். உங்களின் அறிவுத்திறன் மற்றும் பேச்சுத் திறன் மேம்படும். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், கூட்டு தொழில் நண்பர்கள் ஆதரவு வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடக்கும்.
மிதுனம்
புதன் உங்கள் ராசி அதிபதி மற்றும் 4 ஆம் வீட்டுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார். புதனின் நேரடி பார்வையால் தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். படைப்பாற்றல் மற்றும் கலைத் திறமையைப் பயன்படுத்தி தொழில் மற்றும் வேலையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் கூடும் புதிய பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் புதன் பயணம் செய்யப்போவதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். பேச்சின் மூலம், மற்றவர்களிடம் செல்வாக்கு செலுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். படிப்பு மற்றும் கற்பித்தலில் தொடர்புடையவர்கள் இதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புகழ் கீர்த்தி அந்தஸ்து மதிப்பை தரும் ஸ்தானம். நீண்ட காலமா வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும்.
துலாம்
புதன் பகவான் உங்கள் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் பயணம் செய்வதால் நீண்ட தூர பயணங்கள் செல்வீர்கள். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். வேலையில் புதிய உயரத்திற்கு செல்வீர்கள். வியாபாரத்தில் சாதகமான ஒப்பந்தங்கள் ஏற்படும், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும்.
தனுசு
புத்தி நாதன் புதன் உங்கள் ராசியில் அமர்ந்து பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை வாய்ப்பு கிடைக்கும். மனதிற்கு பிடித்த வகையில் வேலை மாற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும், இணக்கம் அதிகரிக்கும். செய்யும் வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஊதிய உயர்வு போன்றவை தேடி வரும். நோய்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள். வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும்.
கும்பம்
புதன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். நிதி நிலைமையை மேம்படும் வகையில் புதிய வருமான ஆதாரங்கள் உண்டாகும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மீனம்
உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் புதன் பயணம் செய்யப்போகிறார். வீடு, நிலம், வண்டி வாகனம் வாங்கலாம். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான கால கட்டம். சகல செளபாக்கியங்கள் தேடி வரும். பண வருமானம் அதிகரிக்கும். புதிய திட்டங்கள் மற்றும் வணிக வாய்ப்புகள் மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறலாம். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம்.
இதனையும் படியுங்கள் : ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்