ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்

- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் மற்றும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேர்கிறார்கள். 2024 வது வருடம் மே மாதம் ஒன்றாம் தேதி 12 ஆண்டுகளுக்கு பின்னர் ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்துள்ளார். திருமண தடைகள் நீங்குவதற்கு வேலை மற்றும் தொழில் அமைவதற்கு செல்வ வளம் பெருகி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கக்கூடிய குருபகவான் ரிஷப ராசியில் 2025 மே 14ஆம் தேதி வரையில்.

-விளம்பரம்-

சூரியன் குரு பகவான் சேர்க்கை

சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார் மாதத்திற்கு ஒரு முறை சூரிய பகவான் இருக்கின்ற ராசியில் இருந்து மாறி மற்ற ராசிக்கு சென்று விடுவார் அந்த வகையில் வைகாசி மாத தொடக்கத்தில் மே 14 ஆம் தேதியில் சூரிய பகவான் ரிஷப ராசிகள் நுழையப் போகிறார் ஏற்கனவே ரிஷப ராசியில் குரு பகவான் இருக்கின்ற சூழ்நிலையில் சூரிய பகவானும் வருவதால் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையானது 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப்போகிறது. அந்த வகையில் இந்த இரண்டு நட்பு கிரகங்களுக்கு இடையே சேர்க்கை ஏற்படுவதால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது இதனால் அவர்களுக்கு செல்வ வளம் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமையும் அந்த வகையில் சூரியன் குரு சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற சில ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.

- Advertisement -

ரிஷப ராசி

சூரியன் மற்றும் குருபகவானின் இந்த சேர்க்கை ரிஷப ராசியில் நடைபெறுவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் சொத்து பணம் மற்றும் குடும்பங்களில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கி உங்களுக்கு நல்லதே நடக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு அந்த வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நீங்கள் எந்த முடிவினை எடுத்தாலும் அது உங்களுக்கு சாதகமாகவே அமையும்.

சிம்ம ராசி

ரிஷப ராசியில் சூரிய பகவான் மற்றும் குரு பகவான் இனிய போவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல காலமாக சாதகமாக அமையும். முக்கியமாக வேலை மற்றும் தொழிலில் வெற்றி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஏதாவது முதலீடு செய்வதாக இருந்தால் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களுடைய தொழிலை விரிவு படுத்தி வணிக வர்க்கத்தில் பொருளாதார ரீதியாக லாபம் பெறுவதற்கு இது ஒரு சிறந்த காலம்.

கன்னி ராசி

ரிஷப ராசியில் சூரியன் குரு சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பன்மடங்கு அடிக்கப் போகிறது என்றே சொல்லலாம் மிகவும் சாதகமான ஒரு காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த அனைத்து வேலைகளும் இந்த காலகட்டத்தில் நிறைவேறி அதன் மூலம் உங்களுக்கு நல்லது நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்த ஆர்வத்தை காட்டி அது வெற்றியும் பெறுவார்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு கிடைக்காத உங்களுடைய முன்னோர்களின் சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும் வெளியூர் செல்ல நினைப்பவர்களும் இந்த காலகட்டத்தில் வெளியூர் சென்று வருவீர்கள் மொத்தத்தில் உங்களுக்கு பலவகையான அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : குரு பகவானால் பண மழையில் நனைய போகின்ற யோகக்கார ராசிகள் யார் தெரியுமா?