சூரியன் பெயர்ச்சியால் ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!
நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலமும் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கு
நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலமும் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. ஜூலை மாதம் 17ம் நாளன்று சூரியன் மிதுன ராசியிலிருந்து கடக ராசியில் பெயர்ச்சியாவார். சூரியனின் இந்த ராசியின் மாற்றம் இந்த ராசியின் தலைவிதியை பிரகாசமாக்குகிறது என்று கூறலாம். புதிய வேலை மற்றும் சம்பள உயர்வு கிடைக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன. சூரியன் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு நிம்மதி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான பலன்களைப் பெற்று மகிழ்ச்சியடையும் அதிர்ஷ்ட ராசிகள் யார் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
நிதி நிலைமை மேம்படுவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு மனதில் நிம்மதி ஏற்படும், கடன் தொல்லைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பண வரப்பில் எந்த குறையும் இருக்காது புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையுடனான உறவு பலமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன், அறிவுக்காரகரின் வீடான மிதுன ராசியினருக்கு சூரியன் பெயர்ச்சி சுப பலன்களைக் கொடுக்கும். கல்வியில் இருந்து வந்த தடைகளும் மனக்குழப்பங்களும் விலகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடையும். வருமானத்திற்கு இந்த குறைவும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்துவதால் லாபம் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும்.
கடகம்
கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த ஆடி மாதம் முழுவதுமே கடக ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும், தொட்டது துலங்கும். ஆலயங்களுக்கு சென்று திருப்தியாக வழிபடும் பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். சுப காரியங்கள் உங்கள் வீட்டில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. பழைய பிரச்னைகளில் இருந்து விடுபட்டு தொழிலில் முன்னேறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஸ்திரத்தன்மை நிலவும். உங்கள் புகழ் உயரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். மனதில் இருந்த கவலைகளுக்கு டாட்டா சொல்லிவிட்டு, உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நிகழும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களால் நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வுடன் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். புகழும் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசியினருக்கு ஆடி மாத சூரியப் பெயர்ச்சி நல்லதை செய்யும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள், ஆன்மீக பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. பிறருக்கு உதவி அதன் பலன்களை உணர்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் தடைப்பட்டு கடத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சரியாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பல பணிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இப்போது அதை செயல்படுத்தலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி சில மாதங்களாக இருந்துவந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலைக்கான முயற்சிகள் வெற்றியடையும். இனி மனக்கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. பணவரவு எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் கைகூடும்.
இதனையும் படியுங்கள் : சனியின் சஞ்சாரத்தால் சனியின் அருளை பெறும் 8 ராசிகள் இவைதான்!!!