பண வரவிற்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியடைய உங்களிடம் இருக்க வேண்டிய ஒரு பை!

பணம் இருந்தால் தான் நம்முடைய அன்றாட தேவைகள் முதல் ஆடம்பர தேவைகள் வரை அனைத்துமே நம்மால் பாகம் முடியும் அயராது உழைத்தாலும் கூட ஒரு சிலருக்கு கையில் பணம் தாங்காது அப்படிப்பட்ட சூழலில் தெய்வத்தை சரணடைந்து பண ஈர்ப்பை ஏற்படுத்த ஒரு சில பரிகாரங்களையும் செய்ய வேண்டும். உயிர் வாழ்வதற்கு உ

By Prem Kumar · 5/10/2024

பணம் இருந்தால் தான் நம்முடைய அன்றாட தேவைகள் முதல் ஆடம்பர தேவைகள் வரை அனைத்துமே நம்மால் பாகம் முடியும் அயராது உழைத்தாலும் கூட ஒரு சிலருக்கு கையில் பணம் தாங்காது அப்படிப்பட்ட சூழலில் தெய்வத்தை சரணடைந்து பண ஈர்ப்பை ஏற்படுத்த ஒரு சில பரிகாரங்களையும் செய்ய வேண்டும். உயிர் வாழ்வதற்கு உணவு உடை இருப்பிடம் அனைத்தும் அத்தியாவசியம் அனைத்திற்குமே நமக்கு தேவை பணம்தான். மக்களாகிய நாம் உயிர் வாழ நமக்கு தேவையான ஒன்று பணம் அதனால் அனைவரும் பணத்திற்கு பின்னால் தான் ஓடிக்கொண்டே இருக்கின்றோம் ஓடிட் சம்பாதித்த பணத்தை நம்மிடம் தக்க வைக்க நாம் வியாழக்கிழமை என்று குபேரருக்கு ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் அதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

குபேரருடைய அருள்

குபேரனுடைய அருள் நமக்கு இருந்தால் பணவரவு அதிகரிக்கும் பொன் பொருள் சேரும் பணம் நம்மிடம் நிரந்தரமாக தங்கும் அதற்கு நாம் இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை என்று சுக்கிர ஹோரையில் செய்யலாம் அல்லது குபேரருடைய அருளை பெற்ற சிறந்த நாளான வியாழக்கிழமை என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு தேவையான ஒரு பொருள் சிவப்பு நிற வெல்வெட் துணி.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

சிவப்பு நிற துணியில் சுருக்கு பை போல் தைத்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக காய வைத்து பன்னீரில் நனைத்து மறுபடியும் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏழு கோமதி சக்கரம் ஏழு ஒரு ரூபாய் நாணயங்கள் ஒரு கைப்பிடி அளவு தாமரை மணி ஒரு கைப்பிடி அளவு குன்றின்மணி. மூன்று ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் சேர்க்க வேண்டும். ரூபாய் நோட்டை தவிர மற்ற பொருட்களை உப்பு கலந்து தண்ணீரில் கழுவி விட்டு சுத்தமான பாலில் கழுவி விட்டு பன்னீர் மஞ்சள் தூள் ஜவ்வாது சேர்த்து அதிலும் கழுவி விட்டு காயவைத்து அந்த சுருக்கு பையில் ஒன்றன்பின் ஒன்றாக வைக்க வேண்டும்.

சுருக்கு பையில் வைக்க வேண்டிய பொருட்கள்

அந்த சுருக்கு பையில் முதலில் ரூபாய் நோட்டுக்களை வைக்க வேண்டும். பிறகு கோமதி சக்கரம் தாமரை மணி குன்றின்மணி போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வைக்க வேண்டும். அந்தப் பையை நம்முடைய உள்ளங்கையில் வைத்து குபேரருடைய மந்திரத்தையும் மகாலட்சுமி தேவியாருடைய மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். பிறகு அதனை பூஜை அறையில் வைத்து தீப தூப ஆராதனை காட்ட வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நாட்கள்

அந்த சுருக்குப்பை ஐந்து நாட்கள் வரையில் பூஜை அறையில் இருக்க வேண்டும். ஐந்து நாட்களுக்குப் பிறகு ஆறாவது நாள் அந்த பை நம்முடன் இருக்க வேண்டும். எப்பொழுதுமே அந்த பை நம்முடனே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்மிடம் எப்பொழுதுமே பணம் இருந்து கொண்டே இருக்கும். இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் சுலபமாக நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கும். எளிமையான இந்த பரிகாரத்தை செய்து பலனை பெறுங்கள்.

இதனையும் படியுங்கள் : பணம் தானாக உங்களுக்கு கிடைக்க ஆஞ்சநேயர் கோவில் செந்தூரத்தை பயன்படுத்த வேண்டிய முறை!

Recipes AMP · Quick view
View full