Advertisement
அசைவம்

நாவில் எச்சி ஊறும் சுவையான சுவரொட்டி சமைப்பது எப்படி ?

Advertisement

நாம் ஒவ்வொரு முறையும் ஆட்டின் கறியை வாங்கி நமக்கு பிடித்தார் போல் மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி அல்லது மட்டன் வறுவல் போன்ற உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவோம். ஆனால் அதையும் தாண்டி அதிக சத்துள்ள ருசியான ஆட்டின் உடல் உறுப்புகளும் இருக்கிறது. நீங்கள் இது போன்ற உணவுகளையும் மாதத்திற்கு ஒரு முறையாவது தயார் செய்து சாப்பிடுவதன் மூலம் உங்களின் உடல் ஆரோக்கியத்தை உங்களால் மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆம், இன்று சுவரொட்டி என்று சொல்லப்படும் ஆட்டின் மண்ணீரல் பகுதி பற்றிதான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : மதுரை மண் வாசனையுடன் மட்டன் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

இதில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் இதை நாம் சமைத்து சாப்பிடும் பொழுது நம் உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்ததின் அளவும் அதிகரிக்கும். அதுபோல் பெண்கள் கர்ப்பிணி காலங்களில் இதை செய்து சாப்பிடும் பொழுது உங்களுக்கு இருக்கும் உயர் ரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் சரியாகிவிடும். இன்று இந்த சுவரொட்டியை எப்படி எளிமையான முறையில் சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சுவரொட்டி கிரேவி | Suvarotti Gravy Recipe in Tamil

Print Recipe
சுவரொட்டியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் இதை நாம் சமைத்து சாப்பிடும் பொழுது நம் உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்ததின் அளவும் அதிகரிக்கும். அதுபோல் பெண்கள் கர்ப்பிணி காலங்களில் இதை செய்து சாப்பிடும் பொழுது உங்களுக்கு இருக்கும் உயர் ரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் சரியாகிவிடும். இன்று இந்த சுவரொட்டியை எப்படி எளிமையான முறையில் சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த
தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்
Advertisement
Course Main Course
Cuisine Indian, TAMIL
Keyword Suvarotti Gravy, சுவரொட்டி கிரேவி
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 49

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • ½ KG சுவரொட்டி
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp சீரகத் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp மிளகு தூள்
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • நீங்கள் வாங்கி வைத்திருக்கும் சுவரொட்டியில் ஒட்டியுள்ள கொழுப்புகளை முதலில் நீக்கி
    Advertisement
    கொள்ளுங்கள். பின்பு சுவரொட்டியை தண்ணீரில் இரண்டு முறை நன்கு அலசிக் கொள்ளுங்கள்.
  • சுவரொட்டியை வெட்டிய பிறகு கழுவ கூடாது ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். சுவரொட்டியை சிறிது சிறிதாக வெட்டிக் ஓரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள்.
  • பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடேறியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், சிறிது உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள்.
  • பின்பு நாம் வெட்டி வைத்திருக்கும் சுவரொட்டியை கடாயில் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அவசரப்பட்டு தண்ணி ஊற்றி விடாதீர்கள் சுவரொட்டி நன்கு வதங்கி வரும் பொழுது அதிலேயே தண்ணீர் வரும். அதன் பின் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • இப்பொழுது சுவரொட்டி நன்கு வதங்கியதும் உப்பு சரி பார்த்துக் கொள்ளுங்கள். உப்பு தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  • பின் கொத்தமல்லியை பொடியா நறுக்கி தூவி விட்டு ஒரு நிமிடம் கிளறி விட்டு கடாயை இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் நாம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரூசிகரமான சுவரொட்டி இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Serving: 4person | Calories: 49kcal | Protein: 6.9g | Fat: 2.4g

English Overview: suvarotti gravy is one of the most important dishes in india. suvarotti garvy recipe or suvarotti gravy eppadi recipe or suvarotti gravy recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

46 நிமிடங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

4 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

4 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

5 மணி நேரங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

7 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

9 மணி நேரங்கள் ago