Advertisement
சைவம்

இட்லி தோசைக்கு பக்காவான சுட்ட  சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! 4 இட்லி அதிகமாக சாப்பிடுவாங்க!

Advertisement

டெய்லி இட்லி தோசைக்கு என்ன சட்னி வைக்கிறது அப்படிங்கறது பெரிய யோசனையா இருக்குதா? ஒரே மாதிரியே சட்னி வச்சாலும் எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு பிடிக்கவே மாட்டேங்குதா ?இப்படி பண்றவங்களுக்கு எப்படிடா சாப்பாடு செய்து கொடுக்கிறது?  என்ன வித்தியாசமா செய்யறது அப்படின்னு யோசிச்சு யோசிச்சு புதுசா நீங்க ட்ரை பண்ணி செய்றீங்களா? அப்படி நீங்க புதுசு புதுசா யோசிச்சு சட்னி செய்றீங்க அப்படின்னா இந்த சட்னியை ட்ரை பண்ணி பாருங்க.

சுவையான சுட்ட சட்னி அது என்னடா சுட்ட சட்னி எல்லாத்தையும் வதக்கி தான் சட்னி செய்வோம். ஆனால் இதுல நம்ம எல்லாத்தையும் நெருப்புல சுட போறோம். இந்த சுவையான சட்னியை ரொம்பவே ஈஸியா சிம்பிளா பண்ணிடலாம் . இதுகு டைம் கூட ரொம்பவே ஆகாது. ரொம்ப ஈஸியா சுலபமா இந்த சுட்ட சட்னியை எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்குவோம். இந்த சட்னி செய்யறதுக்கு தேவையான பொருட்களும் ரொம்ப ரொம்ப குறைவு . எப்போதும் நம்ம சட்னி செய்ய யூஸ் பண்ற அதே பொருட்கள் தான் என்ன கொஞ்சம் வித்தியாசமாக செய்ய போறோம்.

Advertisement

இந்த சட்னியோட வாசனை ஒரு பொருளை சுட்டா என்ன மாதிரியான ஒரு வாசனை இருக்குமோ அந்த வாசனையோடு வித்தியாசமா இருக்கும். சிலருக்கு அந்த வாசனை எப்படி இருக்கும் அப்படிங்கிற மாதிரி யோசிப்பாங்க நம்ம நார்மலா தந்தூரி, கிரில் சிக்கன் சாப்பிடுற மாதிரியான ஒரு பிளேவரில் இந்த சட்னி இருக்க போகுது. அப்போ எல்லாருக்கும் இந்த சட்னி கண்டிப்பாவே பிடிக்கும். இந்த சுவையான சட்னி எப்படி ரொம்பவே ஈசியா செய்து எல்லாருக்கும் கொடுத்து எப்போதுமே ஒரே மாதிரியான சட்னி சாப்பிடுவதில் இருந்து வித்தியாசமான ஒரு சட்னி சாப்பிடுற அனுபவத்தை கொடுக்கப் போறோம். வாங்க இந்த சுவையான சுட்ட சட்னியை எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

சுவையான சுட்ட சட்னி | Suvayaana Sutta Chutney In Tamil

Print Recipe
சுட்ட சட்னியோட வாசனை ஒரு பொருளை சுட்டா என்ன மாதிரியான ஒரு வாசனை இருக்குமோ அந்த வாசனையோடு வித்தியாசமா இருக்கும். சிலருக்கு அந்த
Advertisement
வாசனை எப்படி இருக்கும் அப்படிங்கிற மாதிரி யோசிப்பாங்க நம்ம நார்மலா தந்தூரி, கிரில் சிக்கன் சாப்பிடுற மாதிரியான ஒரு பிளேவரில் இந்த சட்னி இருக்க போகுது. இந்த சுவையான சட்னி எப்படி ரொம்பவே ஈசியா செய்து எல்லாருக்கும் கொடுத்து எப்போதுமே ஒரே மாதிரியான சட்னி சாப்பிடுவதில் இருந்து வித்தியாசமான ஒரு சட்னி சாப்பிடுற அனுபவத்தை கொடுக்கப் போறோம். வாங்க இந்த சுவையான சுட்ட சட்னியை எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்
Course chutney
Cuisine tamil nadu
Keyword Sutta Chutney
Prep Time 5 minutes
Cook Time 12 minutes
Servings 4
Calories 83

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 5 காய்ந்தமிளகாய்
  • 1 முழு பூண்டு
  • 5 வெங்காயம்
  • புளி திராட்சை அளவு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் அடுப்பில் வெங்காயம் பூண்டை சுடுவதற்கு தேவையான ரோஸ்டர் கிரில்லை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த கிரில் மேல் தோல் உரிக்காத வெங்காயம் , பூண்டை அப்படியே வைத்து சுட வேண்டும்.
  •  ஒரு பக்கம் நன்றாக சுட்ட பிறகு மறு பக்கமும் திருப்பி வைத்து சுட வேண்டும் . சுட்டு வைத்துள்ள வெங்காயம் பூண்டை எடுத்து ஆற வைக்க வேண்டும்.
  • பின்பு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து வறுத்துக் கொள்ளவும்  பிறகு அதில் புளி, காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வறுத்து ஆற வைத்துக் கொள்ளவேண்டும்.
  •  முதலில் ஆற வைத்த பூண்டுமற்றும் வெங்காயத்தில் உள்ள மேல் தோலை உரித்து எடுத்து விட வேண்டும் வெங்காயத்தையும் பூண்டையும் கழுவ வேண்டாம் அப்பொழுதுதான் சுட்டதுடைய வாசனை சட்னியில் வரும்.
  • பிறகுஒரு மிக்ஸி ஜாரில் தோலுரித்து வைத்துள்ள பூண்டு, வெங்காயத்தை சேர்த்து அதனோடு வறுத்து ஆற வைத்துள்ள உளுந்து,கடலைப்பருப்பு , காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது உப்போடு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் தாளிப்பை சேர்த்து நன்றாக கலந்து விட்டு பரிமாறினால் சுவையான சுட்ட சட்னி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 83kcal | Carbohydrates: 14.2g | Protein: 3.6g | Fiber: 3.6g
Advertisement
Prem Kumar

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

6 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

14 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

22 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago