Advertisement
ஸ்வீட்ஸ்

சுவையான கடலைப்பருப்பு வெல்லம் போளி செஞ்சி பாருங்க!

Advertisement

எவ்வளவுதான் இனிப்பு வகைகள் இருந்தாலும் இந்த போளிக்கு இணையாக முடியுமா. மிகவும் குறுகிய நேரத்தில் சுவையான போளி தயார் செய்து உங்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைக்கலாம். அதே நேரத்தில் கொடுக்கக் கூடிய பொருட்களும் மிகவும் குறைவானது தான் அதே நேரத்தில் சத்து மிகுந்ததாகும் அப்படி உங்களுக்கு மைதா போளி வேண்டாம் என்றால் மைதாவுக்கு பதில்

இதையும் படியுங்கள்: நாவில் எச்சி ஊறும் சுவையான ஸ்வீட் கார்ன் கபாப் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

கோதுமையில் கூட போளி செய்யலாம் அது இன்னும் சத்து வாய்ந்ததா இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடலைப்பருப்பு வெல்லம் போளி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த கடலைப்பருப்பு வெல்லம் போளி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கடலைப்பருப்பு வெல்லம் போளி| Sweet Polie Receipe in Tamil

Print Recipe
எவ்வளவுதான் இனிப்பு வகைகள் இருந்தாலும் இந்த போளிக்கு இணையாக முடியுமா. மிகவும் குறுகிய நேரத்தில் சுவையான போளி தயார் செய்து உங்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைக்கலாம். அதே நேரத்தில் கொடுக்கக் கூடிய பொருட்களும் மிகவும் குறைவானது தான் அதே நேரத்தில் சத்து மிகுந்ததாகும் அப்படி உங்களுக்கு மைதா போளி வேண்டாம் என்றால் மைதாவுக்கு பதில் கோதுமையில் கூட போளி செய்யலாம் அது இன்னும் சத்து வாய்ந்ததா இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடலைப்பருப்பு வெல்லம் போளி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword polie, கடலைப்பருப்பு வெல்லம் போளி
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 634

Equipment

  • 1 தோசை கல்
  • 1 தோசை கரண்டி

Ingredients

  • 1 cup மைதா
  • 1 cup கடலைப்பருப்பு
  • ½ cup வெல்லம்
  • ½ cup துருவிய தேங்காய்
  • 50 gm நெய்
  • தண்ணீர்                      தேவையான அளவு
  • உப்பு                              சிறிதளவு

Instructions

  • கடலைப்பருப்பு வெல்லம் போளி முதலில் மைதா மாவை தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைய வேண்டும்.பின் மாவை சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
    Advertisement
  • பின் கடலைப்பருப்பை குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். இரண்டு விசில் வைக்க வேண்டும்.கடலை பருப்பு குழையாமல் இருக்க வேண்டும்.
  • பின்னர் வேக வைத்த கடலைப்பருப்பை வடித்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் வேக வைத்த கடலைப்பருப்பு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.பின் வெல்லத்தை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அரைத்தவற்றை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதே மிக்ஸி ஜாரில் தேங்காய் சில்லை அடித்து தேங்காய் துருவலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் கடலைப்பருப்பு கலவையுடன் தேங்காய் துருவலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது பூரணம் தயார்
  • அடுப்பில் தோசை கல்லை சிறிது எண்ணெய் ஊற்றி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் பிசைந்த வைத்துள்ள மாவை வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் சிறிது எண்ணெய் ஊற்றி தடவி சப்பாத்தி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதில் சிறு உருண்டையை எடுத்து தட்டி அதில் பூரணத்தை வைத்து மூடிவைத்து வாழை இலையில் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்
  • பின் தட்டி வைத்த மாவை தோசைக்கல்லில் சிறிது நெய் விட்டு பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது சூடான கடலைப்பருப்பு வெல்லம் போளி போளி ரெடி.

Nutrition

Serving: 300gm | Calories: 634kcal | Carbohydrates: 34.2g | Protein: 1.2g | Fat: 4.5g | Saturated Fat: 1.2g | Polyunsaturated Fat: 2.3g | Monounsaturated Fat: 0.9g | Trans Fat: 0.2g | Cholesterol: 8.6mg | Sodium: 123mg | Potassium: 243mg | Fiber: 1.2g | Sugar: 7.5g | Calcium: 32mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

9 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

10 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

11 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

15 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

15 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

15 மணி நேரங்கள் ago