நெல்லிக்காய் வைத்து சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் வீட்டிலேயே இப்படி ஒரு முறை செய்து வைத்துக் கொள்ளுங்கள்!!

அடிக்கிற வெயிலுக்கு கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் சூப்பரான காமினேஷன். ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் கடையில் வாங

By Prem Kumar · 24/3/2026

அடிக்கிற வெயிலுக்கு கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் சூப்பரான காமினேஷன். ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் கடையில் வாங்கினால் சரியா வருமா? அதற்கு மொத்தமாக ஒரே டைமில் 2 மாதத்துக்கு தாங்கும் அளவுக்கு சூப்பரான ஊறுகாய் வீட்டிலேயே செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதுவரை மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன் மற்றும் கோழி என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்திருப்பீர்கள் ஆனால் நெல்லிக்காய் கொண்டு ஊறுகாய் செய்ததுண்டா? ஆம் நெல்லிக்காய் கொண்டு ஊறுகாய் செய்யலாம் நன்கு காரசாரமாக சிறிது இனிப்பு சுவையுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

நம் அனைவருக்கும் நெல்லிக்காய் என்றாலே அப்படியே சாப்பிடுவது அல்லது நறுக்கி உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுவது அல்லது ஜூஸ் போட்டு குடிப்பது மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் நெல்லிக்காய் கொண்டு பலவிதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் இந்த நெல்லிக்காய் ஊறுகாய். இதில் நாம் கடுகு, வெந்தயம், சீரகம் அரைத்து சேர்ப்பதால் மிகவும் ருசியாக இருக்கும். இப்போது சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் வீட்டிலேயே எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு நெல்லிக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Recipes AMP · Quick view
View full