உருளைக்கிழங்கு வைத்து இதுவரை எத்தனையோ ரெசிபிகளை செய்திருப்பீர்கள் அந்த வகையில் இந்த ஹினி சில்லி பொட்டேட்டோ ரெசிபியை செய்து பாருங்கள்!!

பொதுவாக அசைவ பிரியர்களும் விரும்பும் சைவ உணவு என்றால் அது நிச்சயம் உருளைக்கிழங்காகத்தான் இருக்கும். அந்தளவுக்கு உருளைகிழங்கு தனித்துவமாக சுவை கொண்டதாக காணப்படுகின்றது.உருளைக்கிழங்கு எந்த வகையான காய்கறியுடனும் சேர்த்து சமைக்கக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும். உருளைக்கிழங்கை

By Prem Kumar · 26/5/2025

பொதுவாக அசைவ பிரியர்களும் விரும்பும் சைவ உணவு என்றால் அது நிச்சயம் உருளைக்கிழங்காகத்தான் இருக்கும். அந்தளவுக்கு உருளைகிழங்கு தனித்துவமாக சுவை கொண்டதாக காணப்படுகின்றது.உருளைக்கிழங்கு எந்த வகையான காய்கறியுடனும் சேர்த்து சமைக்கக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும். உருளைக்கிழங்கை பிடிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், இதில் சிக்கனுக்கு நிகரான சுவை உள்ளது. உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளைக்கிழங்கில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

குறைந்த இரத்த அழுத்தம் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதுடன் சருமத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்வதில் உருளைக்கிழங்கு முக்கிய இடம் வகிக்கின்றது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. இதனை வறுத்து உண்பதை விட வேகவைத்து உண்பதே நல்லது. உருளைக்கிழங்கு வாய்வு என்றாலும் அதைக் குறைத்துக் கொள்வதற்கு என்னவோ நமக்கு மனம் வருவதில்லை. ஏனென்றால் உருளைக்கிழங்கு அந்த அளவிற்கு சுவையை கொடுப்பது ஆகும். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே உருளைக்கிழங்கு என்றால் அலாதியான பிரியம் உண்டு.

உருளைக்கிழங்கு வைத்து எந்த ரெசிபி செய்தாலும் அனைத்தும் காலி ஆகிவிடும் செய்து முடித்த அடுத்த நொடி பொழுதில். உருளைக்கிழங்கு வைத்து பொரியல், பொடிமாஸ், மசாலா, கிரேவி,பிரெஞ்சு ப்ரைஸ் என்று பல விதங்களில் சமைக்கலாம். அந்த வகையில் இன்று நாம் ஹனி சில்லி பொட்டேட்டோ ரெசிபியை காண உள்ளோம். இதனை சிறு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள். மீண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை மிக ஆபாரமாக இருக்கும். இப்போ சுவையான மற்றும் க்ரிஸ்பியான ஹனி சில்லி பொட்டேட்டோ ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : அவல் உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்

Recipes AMP · Quick view
View full