சப்பாத்தி மற்றும் பூரியுடன் சேர்த்து சாப்பிட சுவையான மஷ்ரூம் பட்டர் மசாலா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
இரவு நேரத்தில் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் சற்று க்ரீமியாக கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் காளான் பட்டர் மசாலா செய்யுங்கள். இதுவரை நீங்கள் பன்னீர் பட்டர் மசாலாவைத் தான் கேட்டிருப்பீர்கள். காளான் பட்டர் மசாலா என்பது வேறொன்று
இரவு நேரத்தில் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் சற்று க்ரீமியாக கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் காளான் பட்டர் மசாலா செய்யுங்கள். இதுவரை நீங்கள் பன்னீர் பட்டர் மசாலாவைத் தான் கேட்டிருப்பீர்கள். காளான் பட்டர் மசாலா என்பது வேறொன்றும் இல்லை. இதில் பன்னீருக்கு பதிலாக காளானை சேர்க்க வேண்டும். முக்கியமாக இந்த காளான் பட்டர் மசாலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது காளான் பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று காண்போம்.
இன்றைய தலைமுறையின் முக்கிய உணவுளில் ஒன்று காளான். சைவ உணவு உண்பவர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி காளான்களை தங்கள் உணவுகளில் மக்கள் சேர்த்துக் கொள்கின்றனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த காளான், மற்ற பொருட்களைக் காட்டிலும் அதிகளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் உடையதாகும். பொதுவாக காளான் குறைந்த கலோரிகள், கொழுப்பு மற்றும் சோடியம் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும்.
காளான்கள் அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு ஆகிய பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மஷ்ரூம் பட்டர் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். சுவையாக அதேசமயம் எளிய முறையில் மஷ்ரூம் பட்டர் மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஈவினிங் டைம்ஸ் மஷ்ரூம் கட்லட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!