தரித்திரத்தை கொடுக்கக்கூடிய பத்து பொருட்கள்!

நம் வீட்டில் நமக்கே தெரியாமல் தரித்திரத்தை தரக்கூடிய சில பொருட்கள் இருக்கும். அந்த பொருட்கள் எல்லாம் நம் வீட்டில் இருந்தால் வீட்டில் செல்வம் சேரவே சேராது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த வகையில் தரித்திரம் தரக்கூடிய ஒரு பத்து பொருட்களை உங்கள் வீட்டில் வைத்திருக்காமல் தூக்கி போட

By Prem Kumar · 8/11/2024

நம் வீட்டில் நமக்கே தெரியாமல் தரித்திரத்தை தரக்கூடிய சில பொருட்கள் இருக்கும். அந்த பொருட்கள் எல்லாம் நம் வீட்டில் இருந்தால் வீட்டில் செல்வம் சேரவே சேராது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த வகையில் தரித்திரம் தரக்கூடிய ஒரு பத்து பொருட்களை உங்கள் வீட்டில் வைத்திருக்காமல் தூக்கி போட்டு விடுங்கள். தரித்திரம் தரக்கூடிய அந்த பத்து பொருட்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தரித்திரம் தரக்கூடிய சில பொருட்கள்

வீட்டில் கிழிந்து போன செருப்புகள் ஷூக்கள் போன்றவை இருக்கும். அவை வீட்டில் இருந்தால் வீட்டிற்கு துரதிஷ்டத்தை கொடுக்கும் எனவே தேவை இல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய காலணிகளை தூக்கி எறிய வேண்டும்.

பழைய துடைப்பத்தை தூக்கி போடுவதற்கு சிலருக்கு மனதை வராது. தேய்ந்து போன துடைப்பம் துரதிஷ்டத்தையும் தரித்திரத்தையும் உண்டாக்கும் எனவே அதனை வீட்டில் வைக்காமல் தூக்கி போட்டு விடுங்கள்.

நெருப்பில் எரிந்த துணிகள் கிழிந்து துணிகளை வீட்டில் வைத்திருக்கவே கூடாது அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

வீட்டில் பயப்படாத நிலையில் வைத்திருக்கக் கூடிய பியூஸ் போன பல்புகளை வைத்திருக்காமல் தூக்கி எறிய வேண்டும்.

தலை சீவிய பிறகு கிடைக்கும் தலைமுடி, நகங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்திருக்கக் கூடாது.

வீட்டில் நாம் பயன்படுத்தக்கூடிய மிதியடிகளை ஆறு மாதத்திற்கு மேல் கிழிந்த நிலையில் இருக்கக்கூடியவற்றை மாற்ற வேண்டும்.

வீட்டில் வைத்திருக்கக் கூடிய புகைப்படங்களில் இருக்கக்கூடிய தூசுகளை துடைக்க வேண்டும். தூசுகளை படிய விட்டால் தரித்திரம் அதிகமாக வரும்.

வீட்டில் உடைந்து போன கண்ணாடி துண்டுகள் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும் அவை வீட்டில் எதிர்மறை ஆற்றலை தூண்டிவிடும்.

வீட்டில் சமையல் செய்த சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை நிறைய குவித்து வைக்கக் கூடாது அதனை கழுவி வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வீட்டில் அங்காங்கே படித்திருக்கும் அழுக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருந்தால்தான் வீட்டில் மகாலட்சுமி தேவி வாசம் செய்வாள்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் தரித்திரம் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை!

Recipes AMP · Quick view
View full