Advertisement
சைவம்

கோயம்புத்தூர் தட்டாம்பயிறு கடையல் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

இன்று மதிய உணவுக்கு செய்யக்கூடிய வகையில் மிகவும் சுவையான ஒரு பயிறு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். ஆம், இன்று தட்டாம்பயிறு குழம்பு தான் செய்யப்போகிறோம் ஆனால் நீங்கள் வழக்கமாக செய்யும் தட்டாம்பயிறு குழம்பு அல்ல கோயம்புத்தூர் பகுதியில் பிரபலமாக மற்றும் அதிகமாக செய்யும் தட்டாம்பயிறு கடையல் குழம்பு. இந்த குழம்பை நீங்கள் மதிய உணவுக்கு ஒரு முறை செய்து பாருங்கள் ஒரு தட்டு சோறும் காலியாகும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : காரசாரமான கன்னியாகுமரி நண்டு மசாலா குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

பயிறு குழம்பு பிடிக்காது என்று கூறுபவர்கள் கூட இந்த தட்டாம்பயறு கடையல் குழம்பை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் நாம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நீங்கள் மறுநாள் என்ன குழம்பு வைக்கலாம் என்று சிந்திப்பதற்கு பதில் வாரத்தில் ஒரு நாள் இந்த குழம்பை செய்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் சலிக்காமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று கோயபம்புத்தூர் தட்டாம்பயிறு கடையல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் பாருங்கள்.

தட்டாம்பயிறு கடையல் குழம்பு | Thattam Payaru Kulambu Recipe in Tamil

Print Recipe
நீங்கள் வழக்கமாக செய்யும் தட்டாம்பயிறு குழம்பு அல்லாமல் கோயம்புத்தூர் பகுதியில் பிரபலமாக மற்றும் அதிகமாக செய்யும் தட்டாம்பயிறு கடையல் குழம்பு. இந்த குழம்பை நீங்கள் மதிய உணவுக்கு ஒரு முறை செய்து பாருங்கள் ஒரு தட்டு சோறும் காலியாகும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும். பயிறு குழம்பு பிடிக்காது என்று கூறுபவர்கள் கூட இந்த தட்டாம்பயறு கடையல் குழம்பை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் நாம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நீங்கள் மறுநாள் என்ன குழம்பு வைக்கலாம் என்று சிந்திப்பதற்கு பதில் வாரத்தில் ஒரு நாள் இந்த குழம்பை செய்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் சலிக்காமல் சாப்பிடுவார்கள்.
Course Kulambu, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Thattam Payaru, தட்டாம்பயிறு
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 5 people
Calories 194
Advertisement

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Ingredients

குக்கரில் வேக வைக்க

  • 150 கிராம் தட்டாம் பயறு வறுத்தது
  • 500 Ml தண்ணீர்
  • 10 பல் பூண்டு
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை

பொடி அரைக்க

  • 1 tbsp மல்லி
  • 1 tbsp சீரகம்
  • 6 வர மிளகாய்

தாளிக்க

  • 2 tbsp தேங்காய் எண்ணெய்
  • 20 சின்ன வெங்காயம்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • அரைத்த பொடி

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நாம் வைத்திருக்கும் 150 கிராம் தட்டாம்பயிரை சேர்த்து பிறகு ஐந்து நிமிடங்கள் மணம் வரும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் வறுத்த தட்டாம்பயிறை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு முறை நன்கு அலசிக் கொள்ளுங்கள்
  • பின் குக்கரை அடுப்பில்
    Advertisement
    வைத்து தட்டாம்பயிறை சேர்த்து அதில் 500 ML தண்ணீர் ஊற்றி அதனுடன் 10 பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டீஸ்பூன் மல்லி ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் ஐந்து வர மிளகாய் சேர்த்து திருதிருவேன அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தோல் உரித்து வைத்திருக்கும் 20 சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  • பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு நன்கு வதங்கி வந்தவுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி விட்டு பின் குக்கரில் வேகவைத்த பயிருடன் இதை சேர்த்து குக்கரை அடுப்பில் வைத்து குழம்பை நன்றாக கொதிக்க விடுங்கள்.
  • பின் குழம்பு நன்றாக கொதித்து வரும் பொழுது அதனுடன் ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடுங்கள். பின்பு குக்கரில் உள்ள குழம்பை பருப்பு மத்து வைத்து நன்றாக கடைந்து விடுங்கள். அவ்வளவுதான் சுவையான கோயம்புத்தூர் தட்டாம்பயிர் கடையல் குழம்பு தயார்.

Nutrition

Serving: 300gram | Calories: 194kcal | Carbohydrates: 35g | Protein: 13g | Fat: 0.9g | Fiber: 11g

English Overview: thattampayaru kulambu is one of the most important dishes in india. thattapayaru kulambu recipe or thattam payaru kulambu eppadi seivathu or thattapayaru kulambu in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Advertisement
Prem Kumar

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

40 நிமிடங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

11 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

21 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago