சனி மற்றும் ராகுவின் ஆபத்தான சேர்க்கையால் இந்த ராசிக்காரர்களுக்கு சிக்கல்!!
2025 ஆம் ஆண்டு நீதியின் கடவுளான சனிபகவான் தனது ராசியை மாற்றவுள்ளார். ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் 25 மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். நிழல் கிரகமான ராகு இப்பொழுது மீன ராசியில் உள்ளார். சனி பக
2025 ஆம் ஆண்டு நீதியின் கடவுளான சனிபகவான் தனது ராசியை மாற்றவுள்ளார். ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் 25 மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். நிழல் கிரகமான ராகு இப்பொழுது மீன ராசியில் உள்ளார். சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனவுடன் மீன ராசியில் சனியும் ராகமும் இணைவார்கள். இந்த கிரக சேர்க்கையால் சில சமயங்களில் யோகங்கள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் யோகங்களில் ராஜயோகங்கள் பெரும் செல்வத்தை சில ராசியினருக்கு வழங்குகின்றன. ஆனால் சில யோகங்களோ பெரும் இழப்பை ஏற்படுத்தி சென்றுவிடுகின்றன. இந்நிலையில் அசுப கிரகங்களான ராகுவும் சனியும் 50 நாட்கள் மீன ராசியில் ஒன்றாக சஞ்சரிக்க உள்ளன. இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படவுள்ளன. இதனால் பல மோசமான விளைவுகளை சந்திக்கவுள்ள ராசிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
பிசாச யோகத்தால் கன்னி ராசியினருக்கு சாதகமற்ற சூழல் உருவாகும். அவர்கள் நன்மை என நினைத்து செய்தால் அது தீமையில் முடியும். நீதிமன்றத்தை அணுக வேண்டி வரலாம். இத்தகைய சூழ்நிலையில், கன்னி ராசிக்காரர்கள் அடுத்த சில நாட்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நேரத்தில், நடந்துகொண்டிருக்கும் வேலைகள் தடைபடும் மற்றும் சரியான நேரத்தில் வேலையை முடிக்காததால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். கல்வியில் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்பதால் மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய நேரமிது.
மகரம்
ஏழரை சனியில் இருந்து விடுபடும் கன்னி ராசியினர் பிசாச யோகத்தால் பாதிக்கப்படவுள்ளனர். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இந்த நேரத்தில் உங்கள் நெருங்கிய நபர் உங்களை ஏமாற்றலாம், அதனால் நீங்கள் மிகவும் வருத்தப்படுவீர்கள். மன மற்றும் நிதி பிரச்சனைகள் அதிகரிக்கலாம். ஆபத்து அறிகுறி தோன்றும். குடும்பம் மற்றும் சுற்றியுள்ள மக்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எந்த பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன், நீங்கள் சிந்திக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் சரியாகப் பேசுங்கள், இல்லையெனில் நீங்கள் நிறைய சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
மீனம்
சனி மாற்றத்தால் மீன ராசியினருக்கு ஜென்ம சனி ஆரம்பிப்பதோடு ராகு, சனி சேர்க்கையால் பல ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன அழுத்தம், உடல் சோர்வு ஏற்படும். நீங்கள் நிதி ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகள், தேவையற்ற அலைச்சல் போன்றவற்றால் விரக்தி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கல்வி மற்றும் சொத்து தொடர்பான முடிவுகள் குறித்து குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதனையும் படியுங்கள் : சுக்கிரனின் இரட்டை பெயர்ச்சியால் இரட்டிப்பான பலன்களைப் பெற போகும் ராசிகள்!