வக்ர நிவர்த்தி அடையும் புதனால் இனி இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப்போகிறது!!
ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிபப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். இவற்றில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள
ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிபப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். இவற்றில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக பயணம் செய்யக்கூடியவர் மிகவும் குறுகிய காலத்தில் பயணம் செய்யக்கூடிய கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மீன ராசியில் வக்ர நிலையில் இருந்த புதன் பகவான், ஏப்ரல் 7ம் தேதி முதல் முன்னோக்கி நகரத் தொடங்கக்கூடிய வக்ர நிவர்த்தி அடைகிறார். புதனின் வக்ர நிவர்த்தியால் சில ராசிகள் வேலை, தொழில் சார்ந்த விஷயத்தில் சாதகமான பலன்களைப் பெறப் போகிறார்கள். அவர்கள் யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு புதனின் வக்ர நிவர்த்தியானது லாப ஸ்தானத்தில் அமர்ந்து பலவீனமான நிலையில் இருந்தாலும், உங்களுக்கு பலவிதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லிணக்கத்தைப் பெறவும். புதனின் நிலை உங்களின் வருமானம், வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய திட்டங்களால் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசி அதிபதியான புதன், கரம் ஸ்தானமான 10ம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான வெற்றிகள் கிடைக்கும். சொந்த தொழில், வியாபாரத்தில் முன்னேற்றங்கள் எதிர்பார்க்கலாம். பயணங்கள் உங்களுக்கு அனுகூலம் தரும். பணியிடத்தில் வழங்கப்படும் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு அஷ்டம ஸ்தானத்தில் புதனின் வக்ர நிவர்த்தியானது, உங்கள் செயல்பாடுகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நிதி ஆதாயங்கள் சிறப்பாகவும், வெற்றிகளையும் பெறலாம். சமூகத்தில் மதிப்பு, மரியாதை பெறலாம். குடும்பத்திலும், பணியிடத்திலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த வேலை கிடைககும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். உடல்நிலை சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைவதால் வீட்டின் சூழல் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நேர்மறையான பலன்களும், நிதி ஆதாயங்களும் பெறுவீர்கள். புதனின் அமைப்பால் வெளியூர், வெளிநாடு சார்ந்த விவகாரங்களில் நன்மை கிடைக்கும். உங்கள் எதிரிகள் மீது வெற்றி காண்பீர்கள். நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் போட்டி குறையும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்களைப் பெறக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மற்றும் புரிதல் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு புதனின் வக்ர நிவர்த்தி அமைப்பானது தொழில், வேலை தொடர்பான வாய்ப்புகள் உண்டு. திருமண வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வியாபாரம் விருத்தி அடையும். செல்வாக்குமிக்க நபர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் செயல்பாடு நேர்மறையான பலன்களைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : பங்குனி மாத ராசி பலன் 2025!!