மதிய உணவாக சாப்பிட ருசியான தினை உளுத்தம் பருப்பு சாதம் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம். குக்கரில் மிக மிக சுலபமான முறையில் தினை உளுந்து சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம். குக்கரில் மிக மிக சுலபமான முறையில் தினை உளுந்து சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக சாதம் என்றால் அரிசியில் செய்யும் சாதம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அது ஒரு பக்கம் இருக்க, இந்த சத்தான தினை உளுந்து சாதம் எத்தனை பேருக்கு தெரியும். சிறுதானியங்களை பற்றி பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இது அனைவரும் அறிந்த சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. நாம் பல வகையான சாதங்களை சுவைத்து இருப்போம். அதில் இடம்பெறாத ஒன்று ஆனால் உடலுக்கு ஆரோக்கியமான ஒரு சாதம் தான் உளுந்து சாதம். மிகவும் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உளுந்து சாதத்தினை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் உடல் வலு பெறும்.
உளுந்து நாம் தவிர்க்கக் கூடாத ஒரு உணவுப் பொருள். உடலை வலுப்படுத்தும் தன்மை உளுந்துக்கு உண்டு. எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உளுந்தை உணவின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வளர் இளம் பெண்களுக்கு ஏற்ற உணவாகும். இதை களி செய்து உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதியில் இதைப் புரிந்துகொண்டு வீடுகளில் உளுந்து சோறு தயார் செய்வது உண்டு. உழுந்து சோறு தயார் செய்வது எப்படி? என இங்கு காணலாம். இந்த உளுந்து சாதம் செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும். இந்த உளுந்து சாதம் மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான தினை புட்டு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!