Home ஆன்மிகம் வேறு வீடு மாற நினைப்பவர்கள் தயாராக இருங்கள் நீங்கள் வீடு மாற இது போல வேற...

வேறு வீடு மாற நினைப்பவர்கள் தயாராக இருங்கள் நீங்கள் வீடு மாற இது போல வேற நாட்களே இல்லை..!

தமிழ் மாதங்களில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதத்தில் என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதில் பலருக்கு சந்தேகங்களும் குழப்பங்களும் இருக்கும். பொதுவாக சித்திரை மாதத்தில் ஒரு சில சுப காரியங்கள் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அந்த வகையில் சித்திரை மாதத்தில் செய்ய வேண்டிய சுப காரியங்களை பற்றியும் செய்யக்கூடாதவைகளையும் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

சித்திரை மாதத்தில் செய்ய வேண்டியவைகள்

சித்திரை மாதத்தில் புது வீடு வாங்கலாமா வீடு கட்டலாமா திருமணம் செய்யலாமா வாடகை வீடு குடி போகலாமா கிரகப்பிரவேசம் செய்யலாமா மொட்டை போடலாமா என்ற பல் வேறு சந்தேகங்கள் இருக்கும். அந்த வகையில் சித்திரை இந்த 2024 வது வருடத்தில் ஏப்ரல் 14 அன்று பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு தினமான இந்த சித்திரை 1 அன்று அனைவரும் சிறப்பாக கனிகள் பணம் வைத்து தெய்வத்தை வழிபடுவார்கள். என்னதான் முழு மாதங்களில் முதல் மாதமாக இந்த சித்திரை மாதம் இருந்தாலும் இந்த சித்திரை மாதத்தில் வாடகை வீட்டில் இருப்பவர்கள் வேறு வாடகை வீட்டிற்கு தாராளமாக போகலாம். சித்திரை மாதத்தில் முதல் நாளான ஒன்றாம் தேதி அன்று மொட்டை போடாமல் மற்ற நாட்களில் மொட்டை போட்டுக் கொள்ளலாம்.

கிரகப்பிரவேசம் செய்ய வேண்டிய நாட்கள்

பொதுவாக சித்திரை மாதத்தில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாமா என்ற கேள்வி ஒரு சிலருக்கு இருக்கும். முதலில் கிரகப்பிரவேசம் நாம் எந்த நட்சத்திரத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ரோகிணி பூசம் சதயம் உத்திரட்டாதி ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தான் புது வீடு கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும். மேலும் வளர்பிறை பஞ்சமி தசமி சப்தமி போன்ற நாட்களிலும் திங்கள் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை போன்ற நாட்களிலும் புது வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.

சித்திரையில் செய்யக்கூடாதவைகள்

வாடகைக்கு வீட்டிற்கு போகும் போது சந்திராஷ்டமம் மற்றும் கரி நாட்களாக இருக்கக் கூடாது. உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாள் அன்று நீங்கள் தாராளமாக வேறு வாடகை வீட்டிற்கும் ஒத்தி வீட்டிற்கும் குடியேறலாம். புது வீடு கிரகப்பிரவேசம் செய்யும் போது மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்களில் தான் புது வீட்டிற்கு குடியேற வேண்டும்.

இதனையும் படியுங்கள் : ராகு கேது பெயர்ச்சியால் அசுர வளர்ச்சி பெற போகும் அந்த 2 ராசிகாரர்கள் யார் ?

-விளம்பரம்-