ராகு கேது பெயர்ச்சியால் அசுர வளர்ச்சி பெற போகும் அந்த 2 ராசிகாரர்கள் யார் ?

- Advertisement -

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அக்டோபர் 8ம் தேதி அன்று ராகு கேது பெயர்ச்சி நடந்தது. இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகினர்.

-விளம்பரம்-

ராகுவும் கேதுவும் நிழல் கிரங்களாக இருந்தாலும் மனிதர்களின் வளர்ச்சியில் நிஜத்தோடு தொடர்புடையவை. ராகு பகவான் மீன ராசிக்கும் கேது பகவான் கன்னி ராகிக்கும் இடப்பெயர்ச்சியாகும் இந்த காலத்தில் ராகு ரேவதி நட்சத்திரத்திலும் கேது சித்திரை நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர். ராகு கேதுவின் பயணம் எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறது என்று பார்க்கலாம்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிகாரர்களுக்கு ராகு பகவான் 10ம் இடத்திற்கும், கேது நான்காம் இடத்திற்கும் வரக்கூடிய நிலையில் உற்றார் உறவினர், பிரிந்து குடும்பம் ஒன்று சேர சாதகமான நாளாக இருக்கும். ராகுவின் அமைப்பானது உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். நினைத்ததை சாதிப்பதற்காக துணிச்சலுடன் செயல்படும் உங்களுக்கு இக்காலத்தில் இரண்டு விதமான பலன்கள் உண்டாகும், மிதுன ராசியினருக்கு ராகு நன்மைகளை வழங்குவார், ஆனால் கேதுவால் குழப்பம், சங்கடங்கள் அதிகரிக்கும். குரு சஞ்சாரத்தால் முயற்சிகள் வெற்றியாகும். ஆனால் திட்டமிட்டு செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும்.

பத்தாம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு பகவானால் உங்களுக்கு வியாபாரம், கலைத்துறையினருக்கு மிகவும் நற்பலன்களை அள்ளித் தருவார். ஆனால் அதுமட்டுமல்லாமல் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். அதனால் தொழிலில் கூடுதல் கவனம் தேவை. தாயாரின் உடலில் கோளாறுகள் அடிக்கடி தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். தாயார் வழி உறவினர்களால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

பரிகாரம்

-விளம்பரம்-

திருப்பாம்புரம் அல்லது காளஹஸ்தி கோவிலுக்கு சென்று வருவதன்‌ மூலம் சங்கடங்கள் குறையும். துர்கையையும், விநாயகரையும் தொடர்ந்து வழிபடுவதன்‌ மூலம் பிரச்சினைகள் குறையும்.

கடகம்

கடக ராசிகாரர்களுக்கு ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டில் ராகு பகவானும், தைரிய ஸ்தானத்தில் கேது பகவானும் வருகின்றனர். இதன் காரணமாக உங்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பொதுவாக ராகு மற்றும் கேது 5ம் இடத்தை சிறப்பு தொடர்பு கொள்ளக்கூடியன. இதனால் கடக ராசியை ராகு சிறப்பு தொடர்பு கொள்ளும். ஏற்கனவே அஷ்டம சனி பலனை அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய கடக ராசியினர்.

இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேலும் சில சிக்கல்கள், கஷ்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். கவனமாக செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி அடையக்கூடிய உங்களுக்கு இக்காலத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். நன்மை உண்டாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். பணிச்சுமை அதிகரிக்கும்.

-விளம்பரம்-

பரிகாரம்

என்னதான் ராகு கேது பெயர்ச்சி சாதகமாக இருந்தாலும் ஒரு பக்கம் பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அது நீங்க திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை வழிபட்டு நெய் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து வந்தால் போதுமானது.