மகாலட்சுமி வீட்டில் நிலைத்து நிற்க நிலைவாசலில் செய்யக்கூடாத தவறுகள்!

நம் வீட்டில் இன்ப துன்பங்கள் வருவதற்கு காரணம் நாம் செய்யக்கூடிய ஒரு சில செயல்களால் தான் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருந்தால் தான் வீட்டில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் லட்சுமி கடாட்சத்தை நிறைகுலைக்கும் வகையில் நாம் ஏதாவது ஒரு தவறுகளை செய்தோமானால் வீட்டில் மகாலட்சும

By Prem Kumar · 26/8/2024

நம் வீட்டில் இன்ப துன்பங்கள் வருவதற்கு காரணம் நாம் செய்யக்கூடிய ஒரு சில செயல்களால் தான் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருந்தால் தான் வீட்டில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் லட்சுமி கடாட்சத்தை நிறைகுலைக்கும் வகையில் நாம் ஏதாவது ஒரு தவறுகளை செய்தோமானால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருக்கவே இருக்காது நம் வீட்டை எந்த முறையில் நாம் பராமரித்து வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக நிலைவாசலில் செய்யக்கூடாத தவறுகள்

நிலைவாசலில் செருப்பு

வீட்டின் நிலை வாசலுக்கு பக்கத்தில் செருப்பை கழட்டி விட்டு வரக்கூடாது அதற்கென்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் அழகாக இரண்டு செருப்புகளையும் சேர்த்து தான் வைக்க வேண்டும். இஷ்டத்திற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக கழட்டி விடக்கூடாது. அதேபோல் நிலை வாசலுக்கு அருகிலேயே செருப்பிற்கான ஸ்டாண்டையும் வைக்கக்கூடாது. வேறு ஏதாவது ஒரு இடத்தில் செருப்பு யார் கண்களுக்கும் தெரியாத வகையில் வைக்க வேண்டும் செருப்பு ஸ்டாண்ட் இரும்பில் இருந்தால் நல்லது பிளாஸ்டிக் மற்றும் மரக்கட்டையால் இருக்கக் கூடாது.

நிலைவாசலில் தெய்வங்களின் திருவுருவப்படம்

நிலை வாசல் கதவில் ஒரு சிலர் தெய்வத்தின் படங்களை வைத்திருப்பார்கள் ஆனால் நிலை வாசக கதவில் தெய்வத்தை வைத்து விட்டு தினமும் அதனை அடிக்கடி திறந்து மூடுவது நல்லது கிடையாது. அது தெய்வத்தை அலைக்கழிப்பது போல் அர்த்தம்.

நிலை வாசலில் செய்ய வேண்டியவைகள்

நிலை வாசலை தாண்டி வீட்டிற்குள் வரும் பொழுது அங்கு எந்த ஒரு துர்நாற்றமும் வீசாமல் இருப்பதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை கற்பூரம் துளசி போட்டு தண்ணீர் ஊற்றி வைக்கலாம் இதனுடன் ஐந்து ரூபாய் நாணயத்தையும் போட்டு வைப்பது உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை சேர்க்கும் அதேபோல் வரவேற்பரப்பில் ஒரு ஊதுபத்தியை பொருத்தி வைப்பது நல்லது. நிலைவாசல் கதவில் ஓம் ஸ்வஸ்திக் போன்ற குறியீடுகளை போட்டு வைக்கலாம்

வீட்டின் பூஜை அறை

பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் தெய்வங்கள் நமக்கு குறைவில்லாத நிறைவான வாழ்க்கையை கொடுக்கும் பூஜையறையை எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ நம் வீட்டில் அந்த அளவிற்கு லட்சுமி கடாட்சம் பெருகும்.

வீட்டின் சமையலறை

வீட்டின் சமையல் அறையை நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் நம் பசியாற்றுவதற்கு தேவையான பொருட்கள் நமக்கு குறைவில்லாமல் நிறைய கிடைக்கும். சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவக்கூடிய இடத்தில் எப்பொழுதுமே எச்சில் பாத்திரங்கள் இருக்கவே கூடாது. எப்பொழுதும் சுத்தமாக பாத்திரங்கள் கழுவி தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு சமையல் அறையை பார்க்கும் போது ஒரு மன நிறைவு வரும் லட்சுமி கடாட்சமும் தானாக வைத்திருக்கும் நுழையும்.

மேற்குறிப்பிட்ட அனைத்தையும் செய்து பாருங்கள், உங்கள் வீட்டில் நிச்சயமாக லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

இதனையும் படியுங்கள் : வீட்டு செல்வம் பெருக நிலை வாசலில் குங்குமம் வைப்பதற்கு முன்னால் வைக்க வேண்டிய ஒரு பொருள்

Recipes AMP · Quick view
View full