வீட்டில் தரித்திரம் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை!

வீட்டை பொருத்தவரையில் ஒருவர் நன்றாக சம்பாதித்தால் தான் அந்த வீட்டில் பண கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் அப்படி சம்பாதித்தாலும் கூட பணம் ஏதாவது ஒரு ரூபத்தில் விரையம் ஆகிக்கொண்டே இருக்கும். வீட்டில் நிலைத்திருக்காது அப்படி இருந்தால் வீட்டில் தரித்

By Prem Kumar · 20/9/2024

வீட்டை பொருத்தவரையில் ஒருவர் நன்றாக சம்பாதித்தால் தான் அந்த வீட்டில் பண கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் அப்படி சம்பாதித்தாலும் கூட பணம் ஏதாவது ஒரு ரூபத்தில் விரையம் ஆகிக்கொண்டே இருக்கும். வீட்டில் நிலைத்திருக்காது அப்படி இருந்தால் வீட்டில் தரித்திரம் இருக்கிறது என்று தான் அர்த்தம். அந்த தரித்திரத்தை ஒழிக்க கடன் பிரச்சினைகள் தீர்ந்து பணவரவு அதிகரிக்க சண்டை சச்சரவுகள் நீங்க மகாலட்சுமி அம்சம் பொருந்திய சில பொருட்களை வீட்டில் நிறைவாக வைத்திருக்க வேண்டும் அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

மகாலட்சுமி தேவியார்

பொதுவாக மகாலட்சுமி தேவியார் தரித்திரம் இருக்கக்கூடிய வீட்டில் குடியேற மாட்டாள் எனது தரித்திரத்தை நீக்கினால் மட்டுமே மகாலட்சுமி தேவியாரை நாம் வீட்டிற்குள் அழைத்து வர முடியும் அப்பொழுதுதான் வீட்டில் அனைத்து காரியங்களும் நல்ல முறையில் நடக்கும் மகிழ்ச்சியும் இருக்கும் அப்படி மகாலட்சுமி தேவியாரை நாம் வீட்டிற்குள் அழைத்து வர ஒரு சில பொருட்கள் நம்முடைய வீட்டில் கட்டாயமாக இருக்க வேண்டும்.

மகாலட்சுமி தேவி நிறைந்திருக்கும் பொருட்கள்

மகாலட்சுமி பல வகையான பொருட்களில் இருக்கிறாள் அதிலும் குறிப்பாக வீட்டின் சமையலறையில் நிறைந்து இருப்பாள். மகாலட்சுமி தேவியார் வீட்டிற்குள் வரவேண்டும் என்றால் சமையல் அறையில் அனைத்து பொருட்களும் நிறைந்து இருக்க வேண்டும். ஒரு பொருள் தீர்வதற்கு முன்பாகவே அந்த பொருளை வாங்கி வைக்க வேண்டும். அப்படி நாம் வீட்டில் முக்கியமாக நிறைவாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள் என்னவென்றால் மஞ்சள் தூள் அரிசி உப்பு மற்றும் எண்ணெய். இவைகள் தீர்ந்து போகும் முன்பை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும் ஏனென்றால் இந்த பொருட்களில் எல்லா மகாலட்சுமி வீற்றிருக்கிறாள். பொதுவாக வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் வீட்டில் கல் உப்பு வாங்கி வைக்க வேண்டும். கல் உப்பு மட்டும் இல்லாமல் மற்ற வேறு குறிப்பிட்ட பொருட்களையும் வாங்கி வைக்கலாம்.

குபேர பகவானின் அருள்

மகாலட்சுமி தேவியாரின் அருளோடு குபேர பகவானின் அருளை பெறுவதற்கு மேற்குறிப்பிட்ட பொருட்களோடு ஊறுகாயையும் வாங்கி வைக்க வேண்டும். அப்படி வைத்தால் வீட்டில் தரித்திரம் இருக்காது. இந்த பொருட்களை வீணாக்காமல் கீழே கொட்டாமல் உபயோகப்படுத்துவதால் மட்டுமே மகாலட்சுமியின் அருளை பெற முடியும் அதனால் வீட்டில் செல்வ நிலையும் உயரும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் மேல் கண்ட பொருட்களை வாங்கி வீட்டில் தரித்திரத்தை நீக்கி மகாலட்சுமியின் அருளை பெறுங்கள்.

இதனையும் படியுங்கள் : வீடு முழுவதும் மகாலட்சுமி கடாட்சம் நிறைய ஏற்ற வேண்டிய தீபம்!

Recipes AMP · Quick view
View full