கொடுத்த பணம் திரும்ப கிடைக்க செய்ய வேண்டியவை!!

இப்பொழுது இந்த காலகட்டத்தில் பணத்தை வாங்கியவர்களை விட கொடுத்தவர்கள் தான் மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் அவசியத்திற்கு பணத்தை வாங்கும் பொழுது எப்படியாவது பேசி வாங்கி விடுவார்கள். ஆனால் அதனை திருப்பித் தரும்போது ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்‌. இப்படி பணத

By Prem Kumar · 12/7/2025

இப்பொழுது இந்த காலகட்டத்தில் பணத்தை வாங்கியவர்களை விட கொடுத்தவர்கள் தான் மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் அவசியத்திற்கு பணத்தை வாங்கும் பொழுது எப்படியாவது பேசி வாங்கி விடுவார்கள். ஆனால் அதனை திருப்பித் தரும்போது ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்‌. இப்படி பணத்தை மற்றவர்களிடத்தில் கொடுத்து ஏமாந்து நிற்பவர்களுக்கு அந்த பணத்தை திரும்ப பெற செய்ய வேண்டிய எளிய பரிகார முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கொடுத்த பணத்தை திரும்ப பெற செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரு சில்வர் பாத்திரம் தேவைப்படும் சுத்தமான தயிர் கருப்பு உளுந்து அனைத்தும் தேவைப்படும். வெள்ளிக்கிழமை இரவு பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் கருப்பு உளுந்தை போட்டு மூழ்கும் அளவிற்கு தயிர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். மறுநாள் சனிக்கிழமை காலை என்று குளித்து முடித்த பிறகு ஊற வைத்துள்ள கருப்பு உளுந்தை அரச மரத்தின் வேர் பகுதியில் கொட்ட வேண்டும். பரிகாரத்தை செய்ய தொடங்கியதிலிருந்து பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று மனதிற்குள் வேண்டி கொண்டே செய்ய வேண்டும்.

பரிகாரத்தை செய்ய வேண்டிய நாள்

இந்த பரிகாரத்தை அமாவாசை என்று செய்ய வேண்டும். அமாவாசை அன்று தொடங்கி அதன் பிறகு வரக்கூடிய 8 சனிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை விடாமல் செய்ய வேண்டும். அரச மரத்தில் அனைத்து தெய்வங்களும் வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உள்ளது. சனிக்கிழமை அன்று பெருமா‌லும் மகாலட்சுமி தாயாரும் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. ஆகையால் தான் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் சனிக்கிழமையில் இந்த அரச மர பரிகாரம் செய்வது மிகவும் நல்லது என கருதப்படுகிறது. பணம் வாங்கியவர்கள் திரும்பி தரக்கூடிய சூழ்நிலையில் இல்லாமல் இருந்தாலும் கூட அதை திருப்பி தருவதற்கான சூழ்நிலையை இந்த பரிகாரம் அமைத்து தரும். ஆகையால் பணத்தை கொடுத்து விட்டு திரும்ப பெறுவதற்கு சிரமமாக இருந்தால் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து அதற்கான பலனை பெற்றுக் கொள்ளுங்கள்.

இதனையும் படியுங்கள் : பணம் அதிகரிக்க அஞ்சறைப் பெட்டி இரகசியம்

Recipes AMP · Quick view
View full