வெள்ளிக்கிழமை அன்று வாங்க வேண்டிய மங்களகரமான சில பொருட்கள்
பொதுவாக வாரத்துல இருக்கிற ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமை தான் தெய்வத்தை வழிபடுவதற்கு பூஜை செய்வதற்கு மிகவும் ஒரு அற்புதமான நாள். ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை இன்னும் சிறப்பானது அப்படின்னு சொல்லலாம். நிறைய விசேஷங்கள் நிறைந்த ஆடி வெள்ளிக்கிழமை அன்னைக்கு நம்ம வீட்ல ஒரு சில பொர
பொதுவாக வாரத்துல இருக்கிற ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமை தான் தெய்வத்தை வழிபடுவதற்கு பூஜை செய்வதற்கு மிகவும் ஒரு அற்புதமான நாள். ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை இன்னும் சிறப்பானது அப்படின்னு சொல்லலாம். நிறைய விசேஷங்கள் நிறைந்த ஆடி வெள்ளிக்கிழமை அன்னைக்கு நம்ம வீட்ல ஒரு சில பொருட்களை வாங்கி வைக்கிறது மூலமா மகாலட்சுமி தாயார் ஓட அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் அதோட மகிழ்ச்சியான வாழ்க்கையும் செல்வ செழிப்பும் நம்ம வீட்ல அதிகமாவே இருக்கும் அப்படி என்னென்ன பொருட்களை நம்ம வாங்கி வைக்கணும் என்பதைப் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான் மங்கள காரகனாக திகழ்வார் அவருடைய அருள் ஒருவருக்கு இருந்தார் வாழ்க்கையில எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கும். திருமணம் தடை குழந்தை பாக்கியம் சொந்தமாக வீடு நிலம் போன்றவை வாங்குகின்ற யோகம் என்று அனைத்துமே செவ்வாய் பகவானுடைய அருளால் நமக்கு கிடைக்கும். வெள்ளிக்கிழமை அன்று மங்கல காரகனாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவானுக்கு உரிய பொருட்களை வாங்குவது மிகச் சிறப்பான ஒரு விஷயம்.
வெள்ளிக்கிழமை அன்று வாங்க வேண்டிய மங்களமான பொருட்கள்
வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டில் பருப்பு வகைகளை வாங்கி வைப்பது மிகவும் சிறந்தது அது நமக்கு மங்களகரமான வாழ்க்கையை கொடுக்கும்.
ஆடி மாதத்தில் நம் வீட்டு பூஜை அறையில் திருமாங்கல்ய சரடு நிறைந்து இருந்தால் மிக சிறப்பானதாக இருக்கும். வெற்றிலை பாக்கும் வீட்டில் நிறைவாக இருக்க வேண்டும். வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய சரடையும் இனிப்புகளையும் வெற்றிலை பாக்கையும் சேர்த்துக் கொடுப்பது மகாலட்சுமி தாயார் உடைய அருளை பெறுவதற்கு ஒரு சிறந்த வழிமுறை. நம் வீட்டிற்கு எதிரிகள் வந்தாலும் கூட இந்த பொருட்களை நாம் கொடுப்பது மிகவும் நல்லது.
ஆடி மாதத்தில் நாம் வாங்க வேண்டிய மற்றொரு பொருள் என்றால் அது வெள்ளி பொருட்கள். குறிப்பாக மீன் குறியீடு இருக்கக்கூடிய வெள்ளியினால் ஆன சாவிக்கொத்தை வாங்கி அதில் வீட்டில் பணம் நகையை வைத்திருக்கக் கூடிய பீரோவிற்கு சாவி கொத்தாக பயன்படுத்தி வைத்திருந்தால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
சங்கு சக்கர நாமத்தையும் வெளியில் வாங்கி நம் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதால் மகாலட்சுமி தாயார் உடைய அருளை பரிபூரணமாக பெற முடியும்.
வெள்ளி நாணயத்தில் ஸ்ரீ சக்கரம் பொரித்து இருப்பது போல் வாங்கி வந்து நம் வீட்டின் பூஜை அறையில் ஏற்றக்கூடிய காமாட்சி விளக்கை போட்ட தீபம் ஏற்றி வந்தால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சில பலன்களை நாம் பெற முடியும்.
மிகவும் எளிமையான சிறப்பான ஒரு சில பொருட்களை உங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஆடி மாதத்தில் வீட்டிற்கு வாங்கி வந்தால் வீட்டில் பொருளாதார நிலை உயர்ந்து கவலைகள் மனக்கஷ்டங்கள் பணக்கஷ்டங்கள் என அனைத்துமே நீங்கி செல்வ செழிப்பாக வாழலாம்.
இதனையும் படியுங்கள் : வெள்ளிக்கிழமை அன்று மறந்தும் செய்யக்கூடாத சில விஷயங்கள்