வறுமையை விரட்டி அடிக்க வீட்டின் பூஜை அறையில் வாங்கி வைக்க வேண்டிய பொருட்கள்
ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி தேவியார் குடியிருக்க வேண்டும் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த வீட்டில் மூதேவி குடி இருக்காமல் மன நிறைவோடு மகிழ்ச்சியோடு வாழ முடியும் மகாலட்சுமி அம்சம் பொருந்திய வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கு இடம் இரு
ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி தேவியார் குடியிருக்க வேண்டும் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த வீட்டில் மூதேவி குடி இருக்காமல் மன நிறைவோடு மகிழ்ச்சியோடு வாழ முடியும் மகாலட்சுமி அம்சம் பொருந்திய வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது ஒரு சில வீடுகளில் பணவரவு இருந்து கொண்டே இருக்கும் ஆனால் சேமிக்க முடியாமல் பணம் வீண் விரயம் ஆகிக்கொண்டே இருக்கும் மகாலட்சுமி வந்தாலும் நிரந்தரமாக தங்க மாட்டாள் இதற்கு நம் வீட்டு பூஜை அறையில் ஒரு சில பொருட்களை வாங்கி வைத்தால் போதும் பண வீண் விரயங்கள் தடுக்கப்பட்டு வறுமையிலிருந்து நம்மை விளக்கிக் கொள்ள முடியும்.
தாமரைத் தண்டு திரி தீபம்
நம் வீட்டில் தினமும் காலை மாலை என இரு வேலைகளிலும் விளக்கு ஏற்றும் போது தாமரை தண்டு திரியில் விளக்கு ஏற்றும் பழக்கத்தை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது சாதாரண திரியை விட தாமரை தண்டு திரி கொஞ்சம் விலை அதிகம் தான் ஆனாலும் மகாலட்சுமி தேவியார் வாசம் செய்யக்கூடிய தாமரை பூவிலிருந்து எடுக்கப்படுகின்ற இந்த தாமரை தண்டு திரியில் தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ள வறுமைகள் நீங்கி மகிழ்ச்சி தங்கம் தாமரை தண்டு திரியை காமாட்சியம்மன் தீபத்தில் போட்டு நல்லெண்ணெய் அல்லது பசு நெய் ஊற்றி தீபம் அப்படி செய்து வந்தால் வீட்டில் வறுமை குறைந்து பண வரவும் இருக்கும் மகாலட்சுமி தேவியாரும் வீட்டில் நிரந்தரமாக இருப்பார்.
தாமரை மணிமாலை மந்திரம்
மகாலட்சுமி தேவியாருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது எந்த ஒரு மந்திரத்தை உச்சரிக்க கூடிய பழக்கம் உங்களுக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை வீட்டில் தாமரை மணிமாலை இருக்க வேண்டியது மிகவும் அவசியம் நாட்டு மருந்து கடைகளில் இந்த தாமரை மணிமாலை கிடைக்கும் அங்கிருந்து வாங்கிக் கொண்டு பூஜை அறையில் இருக்கின்ற மகாலட்சுமியின் உருவப்படத்திற்கு கீழே தாமரை மணி மாளிகை வைத்த தினம் தோறும் தீபம் ஏற்றி முடித்த பிறகு அந்த தாமரை மணிமாலையை உங்கள் கைகளால் தொட்டு உருட்டி “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை உச்சரிக்கும் பட்சத்தில் வீட்டில் மகாலட்சுமி தேவியார் நிரந்தரமாக தங்குவாள்.
மற்றொரு பரிகாரம்
வேலை குறிப்பிட்டுள்ள இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியவில்லை என்றாலும் தினமும் வீட்டில் தாமரை பூவை வாங்கி வந்த மகாலட்சுமி தேவியாருக்கு வைக்க வேண்டும் தினமும் நாம் மகாலட்சுமிக்கு தாமரை பூவை வைத்து பூஜை செய்தால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து செல்வம் நிறையும் என்பது ஐதீகம். நம்முடைய வீட்டில் செல்வ கடாட்சம் நிறைந்து இருந்தால் தான் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் எனவே சிறிய வழிபாடுகளை செய்வதன் மூலம் பெரிய பிரச்சனைகள் வராமல் நம்மால் தடுக்க முடியும். வீட்டில் தரித்திரம் தாங்காமல் இருப்பதற்கு மேற்குறிப்பிட்ட அனைத்து பரிகாரங்களையும் செய்தால் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை செல்வ கடாச்சத்தோடு வாழ முடியும்.
இதனையும் படியுங்கள் : வீட்டு செல்வம் பெருக நிலை வாசலில் குங்குமம் வைப்பதற்கு முன்னால் வைக்க வேண்டிய ஒரு பொருள்