பணக்கஷ்டத்தை தீர்க்கக் கூடிய மூன்று பொருட்கள்!!

வசதி வாய்ப்பு இருப்பவர்களை பார்க்கும் போது நாமும் வசதி வாய்ப்போடு வாழ வேண்டும் என்ற எண்ணம் வரும் ஆனால் இந்த எண்ணம் வருவது தவறு என்றும் நம்மால் சொல்லிவிட முடியாது. அது பொறாமை என்றும் நம்மால் சொல்லிவிட முடியாது வசதியாக வாழ ஆசை இருந்தால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். க

By Prem Kumar · 14/12/2024

வசதி வாய்ப்பு இருப்பவர்களை பார்க்கும் போது நாமும் வசதி வாய்ப்போடு வாழ வேண்டும் என்ற எண்ணம் வரும் ஆனால் இந்த எண்ணம் வருவது தவறு என்றும் நம்மால் சொல்லிவிட முடியாது. அது பொறாமை என்றும் நம்மால் சொல்லிவிட முடியாது வசதியாக வாழ ஆசை இருந்தால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். கடினமாக உழைப்பது ,பணத்தை தேவையில்லாமல் செலவு செய்வது, போன்ற விஷயங்களை பின்பற்றும் போது நிச்சயமாக நம்மாலும் வசதியாக மாற முடியும். அப்படி பணம் சம்பாதிப்பதற்கு என்னென்ன வழிகள் எல்லாம் உள்ளது அதனை நேர்வழியில் முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது நிச்சயமாக மகாலட்சுமி தேவியார் உங்களை தேடி வருவார். உங்களுடைய கையில் அதிகமான பணம் சேர ஒரு மூன்று பொருட்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அந்த பொருட்களை பற்றி பார்க்கலாம்.

பணவரவை தரக்கூடிய பொருட்கள்

துளசி இலை, ஏலக்காய் ,சோம்பு இது மூன்றுமே பணவரவை ஈர்த்து தரக்கூடிய பொருட்கள் மகாலட்சுமி தேவியார் வம்சம் கொண்ட பொருட்கள் இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் செய்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். புதன்கிழமை பெருமாளை நினைத்து செய்யும்போது நிச்சயமாக இரட்டிப்பான பலன்கள் நமக்கு கிடைக்கும்.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

இதற்கு பச்சை நிற வடிவிலான துணியை எடுத்துக் கொள்ள வேண்டும் அதற்குள் துளசீலைகள் ஏலக்காய் சிறிதளவு சோம்பு வைத்து முடிச்சாக கட்டி பெருமாளின் பாதங்களில் வைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப வருமானம் பெற வேண்டும் பணக்கஷ்டம் வரக்கூடாது தொழிலில் வெற்றி பெற வேண்டும் தொழிலில் சம்பள உயர்வு பதவி உயர்வு வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அந்த முடிச்சையும் நம்முடைய கைகளில் எப்பொழுதுமே வைத்திருக்க வேண்டும் பர்சில் கூட வைத்துக் கொள்ளலாம்.

பெருமாளை நினைத்து செய்யக்கூடிய பரிகாரம்

இந்த புதன்கிழமை என்று பரிகாரத்தை செய்கிறோம் என்றால் கடத்த புதன்கிழமை துணியில் உள்ள பொருட்களை எல்லாம் கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மறுபடியும் இதே போன்று செய்ய வேண்டும். முழு மனதோடு பெருமாளை நினைத்து இந்த பரிகாரத்தை செய்தால் பணம் வசியம் கிடைக்கும் பணகஷ்டம் வராது. நம்பிக்கை உள்ளவர்கள் மார்கழி மாதத்தில் புதன்கிழமை என்று பெருமாளை நினைத்து இந்த பரிகாரத்தை செய்து அதற்கான முழு பழனையும் பெறவேண்டும். பர்ஸில் இந்த பொருட்களை வைக்கலாம் அப்படி வைக்கும்போது பர்சில் எப்பொழுது பணம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதனையும் படியுங்கள் : பணம் அதிகமாக சேர வீட்டில் உள்ள அரிசியில் மறைத்து வைக்க வேண்டிய ஒரு பொருள்!!

Recipes AMP · Quick view
View full