தெய்வ அம்சம் பொருந்திய பொருட்கள்!!

வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளிலும் தெய்வ கடாட்சம் நிரம்பி உள்ளதாக முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அதிலும் சமையலறையில் உள்ள ஒவ்வொரு பொருட்களிலும் தெய்வத்தின் அருள் உள்ளது அதன்படி அந்த பொருட்களை எல்லாம் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தம் இல்லாமல் ஒரு சில பொருட்க

By ·

வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளிலும் தெய்வ கடாட்சம் நிரம்பி உள்ளதாக முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அதிலும் சமையலறையில் உள்ள ஒவ்வொரு பொருட்களிலும் தெய்வத்தின் அருள் உள்ளது அதன்படி அந்த பொருட்களை எல்லாம் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தம் இல்லாமல் ஒரு சில பொருட்களை நம் வீட்டில் வைப்பதால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும் வறுமை அதிகரிக்கும். அப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொருட்களை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

தெய்வக் கடாட்சம் நிரம்பிய பொருட்கள்

வீட்டின் சமையல் அறையில் இருக்கக்கூடிய தண்ணீர் பானை குலதெய்வம் வாசம் செய்யக்கூடியது. எனவே தண்ணீர் பானையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மகாலட்சுமி தேவியார் உப்பில் வாசம் செய்வாள் எனவே உப்பு ஜாடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அஞ்சறைப்பெட்டியில் அன்னலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே வறுமை இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு அஞ்சறை பெட்டி எப்பொழுதுமே சுத்தமாக இருக்க வேண்டும்.

குபேர வாசம் பொருந்திய பொருள்

இந்த பொருட்களை சுத்தமாக வைத்திருப்பதோடு சேர்த்து வீட்டில் உள்ள ஊறுகாய் பாட்டிலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குபேரர் ஊறுகாய் பிரியர் எனவே வீட்டில் இருக்கக்கூடிய ஊறுகாய் பாட்டில் எப்பொழுதுமே சுத்தமாக இருந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். எனவே கண்டிப்பாக ஊறுகாய் பாட்டிலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

அம்பாள் வாசம் செய்யக்கூடிய பொருள்

அரிசி வைத்திருக்க கூடிய பாத்திரத்தை எப்பொழுதுமே நாம் தெய்வமாக போற்றி வணங்க வேண்டும் அரிசியல் மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் வாசம் செய்கிறார்கள். எனவே இதனை எப்பொழுதுமே நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மஞ்சளில் அம்பிகை வாசம் செய்கிறாள் எனவே அம்பிகை வாசம் செய்யக்கூடிய மஞ்சள் வீட்டில் குறைவில்லாமல் இருக்க வேண்டும். வட இந்தியாவில் நாம் அரிசியை பயன்படுத்துவது போல் கோதுமையை பயன்படுத்துவார்கள் எனவே கோதுமை வைத்திருக்கக்கூடிய பாத்திரத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதில் சூரிய பகவான் வாசம் செய்கிறார் எனவே வீடு எப்பொழுதுமே வசந்தமுடன் இருப்பதற்கு கோதுமையை வீட்டில் வைத்திருக்க வேண்டும். அதேபோல் துவரம் பருப்பில் செவ்வாய் பகவான் வாசம் செய்கிறார். பச்சைப் பயிரில் புதன் பகவான் வாசம் செய்கிறார் உளுந்தம் பருப்பில் ராகு பகவானும் கொள்ளு பருப்பில் கேது பகவானும் வாசம் செய்கிறார்கள். கொண்டைக்கடலையில் குரு பகவான் வாசம் செய்கிறார் பாலில் சந்திரனும் நல்லெண்ணெயில் சனி பகவானும் வாசம் செய்கிறார்கள். எனவே நம் வீட்டில் சமையல் அறையில் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களையும் நாம் தெய்வ கடாட்சம் நிரம்பிய பொருட்களாக மதித்து அதனை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய அனைத்து பொருட்களும் வீட்டில் நிரம்பி இருக்க வேண்டும் இல்லை என்றாலும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் இப்படி நாம் வீட்டை வைத்திருந்தாலே வீட்டில் வறுமை ஏற்படாது.

இதனையும் படியுங்கள் : தரித்திரத்தை கொடுக்கக்கூடிய பத்து பொருட்கள்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை