குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க செய்ய வேண்டியவை!!
ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆசைப்படுவார்கள். அனைத்து செல்வத்தையும் அழித்துவிட முடியும் ஆனால் கல்வி செல்வத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட கல்வி அறிவு பெறுவதற்கு பல குழந்தைகள் ஏங்கிப்போய் இருக்கிறார்கள். குழந்தை
ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆசைப்படுவார்கள். அனைத்து செல்வத்தையும் அழித்துவிட முடியும் ஆனால் கல்வி செல்வத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட கல்வி அறிவு பெறுவதற்கு பல குழந்தைகள் ஏங்கிப்போய் இருக்கிறார்கள். குழந்தைகள் அனைவரும் படிப்பில் சிறந்து விளங்குவதற்கு செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாட்டை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குலதெய்வம்
குலதெய்வத்தினுடைய அருள் நமக்கு இருந்தால் நம்மால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். குலதெய்வத்தை தினமும் வழிபாடு செய்து வர நமக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளும் சரியாகும். குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாது என்றாலும் வீட்டில் தினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட குலதெய்வத்தை நாம் எந்த நாளன்று வழிபட்டால் வீட்டில் உள்ள குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று பார்க்கலாம்.
குலதெய்வத்தை வழிபடுவதற்கான நாள்
குலதெய்வத்தினுடைய அருள் இருந்தால் அவர்களுடைய வாழ்க்கையில் சிறப்பான பல நன்மைகள் நடைபெறும். எந்தவித காரிய தடைகளும் இருக்காது சிறப்பான முறையில் சுபகாரியை நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் நடக்கும் எதிர்மறை ஆற்றலால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது. குலதெய்வத்தை வழிபாடு செய்வதற்கு என்று ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் உள்ளது. அந்த நாட்களில் குலதெய்வத்தை வழிபாடு செய்தால் மிகவும் சிறப்பானது நம்முடைய பிரச்சனைக்கு தகுந்தார் போல் குலதெய்வத்தை அந்த நாள் அன்று நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
அமாவாசை குல தெய்வ வழிபாடு
குழந்தைகள் நன்றாக படிக்கவில்லை என்றால் படிப்பில் குழந்தைகளுக்கு நாட்டம் இல்லை என்றால் குழந்தைகள் கல்வி அறிவை பெறுவதற்கு ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை திதியன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக மாலை நேரத்தில் அமாவாசை திதி இருக்கக்கூடிய நேரத்தில் சூரியன் அஸ்தமனமான பிறகு குலதெய்வத்தை வழிபாடு செய்தால் மிகவும் நல்லது. குலதெய்வத்தின் பெயரை 108 முறை கூறி ஒரு தீபம் ஏற்றி வைத்து குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று மனதார வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் குழந்தைகள் கல்வி அறிவை பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.
இதனையும் படியுங்கள் : குழந்தைகளுடைய ஒழுக்கத்திற்காகவும் கல்வி அறிவிற்காவும் செய்ய வேண்டிய வழிபாடு!