வறுமை நீங்கி கோடீஸ்வர யோகம் பெற செய்ய வேண்டியவை!!
ஒருவருடைய வாழ்க்கையில் வரும் என்பது ஏற்பட்டுவிட்டால் அதனால் பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உருவாகும். கடன் வாங்குவதற்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்பதால் செவ்வாய் பகவானுக்கு அதிபதியாக அதிகம் பெறக்கூடியவர் முருகப்பெருமான் என்பதால் முருகப்பெருமானை நா
ஒருவருடைய வாழ்க்கையில் வரும் என்பது ஏற்பட்டுவிட்டால் அதனால் பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உருவாகும். கடன் வாங்குவதற்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்பதால் செவ்வாய் பகவானுக்கு அதிபதியாக அதிகம் பெறக்கூடியவர் முருகப்பெருமான் என்பதால் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்தால் கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படாது. பொருளாதாரத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் கடன் பிரச்சனை முற்றிலும் தீர்வதற்கு முருகப்பெருமானை நினைத்து ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முருகப்பெருமான் வழிபாடு
முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் பலவிதமான நன்மைகள் உண்டாகும். வேண்டிய வரத்தை முருக பெருமான் அருள்வார் எனவே ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு விதமான வழிப்பாட்டு முறையை நாம் பின்பற்ற வேண்டும். கடன் பிரச்சனை தீர செவ்வாய்க்கிழமை ஒரு முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று நாம் இந்த ஒரு தீப வழிபாட்டை செய்தோம் என்றால் நிச்சயமாக முருகப்பெருமானுடைய அருள் நமக்கு கிடைத்து வறுமை நீங்கும்.
தீபத்தை ஏற்ற வேண்டிய நாள்
செவ்வாய்க்கிழமை அன்று தீபம் ஏற்றுவது நல்லது. நல்ல நாளாக பார்த்து செவ்வாய்க்கிழமை தேர்வு செய்து அன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இல்லாதவாறு பார்த்துக் கொண்டு விளக்கு ஏற்ற வேண்டும் கரிநாள் அன்றும் ஏற்றக்கூடாது.
முருகப்பெருமானுக்கு ஏற்ற வேண்டிய தீபம்
பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் எப்பொழுதும் போல் வழிபாடு செய்து முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு சிறிய தட்டை வைத்து அதன் மேலாக விளக்கு வைத்து சுத்தமான பசு நெய் ஊற்றி, சிவப்பு நிறத்திரியை போட்டு அதில் டைமண்ட் கல்கண்டு சேர்த்து பச்சை கற்பூரமும் சேர்த்து முருகப்பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். இப்படி முருகப்பெருமானை முழு மனதோடு வழிபாடு செய்தால் நல்லதே நடக்கும். தொடர்ந்து 48 நாட்கள் புதிதாக எண்ணெய் கற்கண்டு பச்சைக் கற்பூரம் திரி சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும். மேலும் முருக பெருமானுடைய ஆலயத்திற்கு சென்று உங்களுடைய கோரிக்கைகளை வைத்து தீபம் ஏற்றலாம். தொடர்ச்சியாக 48 நாட்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயமாக வறுமை நீங்கும்.
இதனையும் படியுங்கள் : பணக்கஷ்டம் தீர முருகனுக்கு ஒரு ரூபாய் பரிகாரம்!!