கர்ம வினையும் பாவமும் தீர செய்ய வேண்டியவை!!
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினமும் முன் ஜென்மத்தில் ஏதாவது ஒரு பாவத்தை செய்திருக்கலாம். அந்த பாவத்தின் விளைவாக ஏற்பட்ட கர்ம வினைகளை அனுபவிப்பதற்காகத் தான் இந்த ஜென்மத்தில் அனைவரும் பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த பாவங்களுக்கு
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினமும் முன் ஜென்மத்தில் ஏதாவது ஒரு பாவத்தை செய்திருக்கலாம். அந்த பாவத்தின் விளைவாக ஏற்பட்ட கர்ம வினைகளை அனுபவிப்பதற்காகத் தான் இந்த ஜென்மத்தில் அனைவரும் பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த பாவங்களுக்கு ஏற்ற கஷ்டங்கள் நமக்கு வந்து சேரும். இன்றைய காலத்தில் யாருமே பாவம் செய்யாமல் வாழ்வது கிடையாது தெரிந்தோ தெரியாமலோ பலவிதமான பாவங்களை செய்து கொண்டு தான் இருக்கிறோம். அதன் விளைவாக கர்ம வினைகள் அதிகரிக்கிறது கர்ம வினைகளால் மறுஜென்மம் எடுத்து அதற்கான பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட கர்ம வினைகளையும் பாவங்களையும் தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
தான தர்மங்கள்
இறைவனை வழிபாடு செய்யும் போது தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று வழிபாடு செய்வார்கள் அப்படி வழிபாடு செய்வதால் மட்டும் பாவங்கள் நீங்காது. அந்தப் பாவங்களை நீக்குவதற்கு நாம் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும். எனவே நம்முடைய முன் ஜென்ம பாவங்களை தீர்ப்பதற்கு நம்மால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு முடியாதவர்களுக்கு தான தர்மங்களை செய்ய வேண்டும் அதிலும் அன்னதானம் செய்வது மிக மிக சிறப்பு. ஒருவேளை கூட சாப்பிட முடியாதவர்களுக்கு அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது அன்னதானம் செய்வதால் ஏற்படக்கூடிய பலன்கள் அதிகமாகவே இருக்கும். அதேபோல் அன்னதானம் எந்த நாளில் செய்கிறோம் என்பதை பொருத்தும் தான தர்மத்தின் பலன்கள் மாறுபடும்.
அன்னதானம் செய்ய வேண்டிய நாள்
மாதந்தோறும் வரக்கூடிய நவமி அஷ்டமி வளர்பிறை போன்ற நாட்களில் மதிய நேரத்தில் வறுமையால் வாடுபவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து தலைவாழை இலை போட்டு சாதம் சாம்பார் ரசம் என முழுமையான ஒரு சாப்பாட்டை அவர்களுக்கு வழங்க வேண்டும். இதனால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கும் கர்ம வினைகளும் நீங்கும். நிறைய பேருக்கு அன்னதானம் செய்ய முடியவில்லை என்றாலும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யலாம்.
அன்னதானம் கொடுக்க வேண்டிய முறை
எந்த ஒரு பொருளை நமக்கு யார் கொடுத்தாலும் போதும் என்று சொல்லவே மாட்டோம் ஆனால் சாப்பாட்டை மட்டும் தான் போதும் என்று கூறுவோம். அதிலும் ஏதாவது ஒரு கலவை சாதத்தை பொட்டணமாக கட்டி மற்றவர்களுக்கு கொடுக்காமல் வீட்டிற்கு அழைத்து வந்து தலைவாழை இலை போட்டு முழுமையான சாப்பாட்டை பரிமாறுவதன் மூலம் அவர்களின் வயிறு மட்டும் இல்லாமல் மனதும் நிரம்பிவிடும். முழு மனதோடு ஒருவருடைய கஷ்டத்தில் பங்கெடுத்து அவர்களுக்கு உதவிகளை செய்யும் போது நம்முடைய கர்ம வினைகள் பாவங்கள் தீர ஆரம்பிக்கும்.
இதனையும் படியுங்கள் : பணக்கஷ்டம் தீர முருகனுக்கு ஒரு ரூபாய் பரிகாரம்!!