உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த ருசியான தூதுவளை ரசம் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! சாதத்துக்கு பக்காவான ரசம்!

இந்த மழைக்காலத்துல எல்லாருக்கும் வரக்கூடிய பிரச்சனை அப்படின்னு பாத்தீங்கன்னா அது சளி, இருமல், தும்மல், தலைவலி இந்த மாதிரி உடல் உபாதைகளுக்கு நாம மழைக்காலங்களில் மெடிக்கல் ஷாப்ல மருந்து வாங்குவது, ஹாஸ்பிடல் போவது மருத்துவர் அணுகுவது அப்படின்னு நம்ம நிறையவே பண்ணுவோம். ஆனால் இது எல்ல

By ·

இந்த மழைக்காலத்துல எல்லாருக்கும் வரக்கூடிய பிரச்சனை அப்படின்னு பாத்தீங்கன்னா அது சளி, இருமல், தும்மல், தலைவலி இந்த மாதிரி உடல் உபாதைகளுக்கு நாம மழைக்காலங்களில் மெடிக்கல் ஷாப்ல மருந்து வாங்குவது, ஹாஸ்பிடல் போவது மருத்துவர் அணுகுவது அப்படின்னு நம்ம நிறையவே பண்ணுவோம். ஆனால் இது எல்லாத்துக்கும் முன்னாடி கை வைத்தியம் என சொல்லப்படக்கூடிய பாட்டி சொன்ன வைத்தியங்களை நம்ம கொஞ்சம் கடைபிடிக்க வேண்டும்.

அப்படி அதுல முக்கியமான ஒரு விஷயம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா அதுதான் தூதுவளை. இந்த தூதுவளை மூலிகை உடல் இருக்க.கூடிய சளி பிரச்சனைகளுக்கு ஏன் ஆஸ்துமா நோய்களுக்கு கூட நல்ல நிவாரணம் கிடைக்குது. அப்படியே இந்த தூதுவளையை துவையலாகவோ இல்ல ரசமாவோ வைத்து உணவுல சேர்த்துக் கொள்ளும் போது அது சளி பிரச்சனை மற்றும் இருமல் தும்மல் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல பலனல கொடுக்குது. அப்படித்தான் இந்த தூதுவளையை வைத்து சூப்பரான ஒரு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டோம் அப்படின்னு சொன்னீங்கன்னா இந்த மழை காலத்துக்கு சாப்பிடறதுக்கும் நல்லா இருக்கும் அது மட்டுமில்லாம சளி பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும்.

இந்த அளவுக்கு ருசியா இருக்கக்கூடிய தூதுவளை ரசத்தை ரொம்பவே ஈஸியா வச்சிடலாம். நல்ல தூதுவளையை பறிச்சிட்டு வந்து முள் இல்லாமல் இலைகளை சுத்தம் செய்து எடுத்து வச்சுக்கிட்டு ரசத்தை செய்தோம்னா அவ்வளவு சுவையா இருக்கும். கொஞ்சம் கூட மிளகு சீரகம் அதிகமா சேர்த்துட்டோம்னா நல்ல காரசாரமா அந்த ரசத்தை ஊத்தி சாப்பிடும்போது அப்படியே அந்த சளி எல்லாம் தானா கரைந்து மூக்கு வழியாக வய ஆரம்பிச்சிரும் அந்த அளவுக்கு சுவையாவும் நல்லா ஆரோக்கியமாக இருக்கிறது இந்த தூதுவளை இலைகளுடைய ரசம்.

இது தூதுவளை நல்ல ஒரு மூலிகை இது வெளிப்புறங்களில் ரொம்பவே சுலபமாக கிடைத்துவிடும். அப்படியே உங்களுக்கு தூதுவளை வேலிகள் பக்கத்துல கிடைக்கல அப்படின்னா ரொம்பவே சிம்பிள் நீங்க பக்கத்துல இருக்குற காய்கறி கடையில கூட வாங்கிக்கலாம். இப்போ எல்லா நகர்ப்புற காய்கறி கடைகளையும் இந்த தூதுவளை கிடைக்குது. சரி வாங்க இந்த சுவையான தூதுவளை ரசத்தை எப்படி வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை