ராகு சுக்கிரன் இணைவால் புது வருடத்தில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் மூன்று ராசிகள்!!
ஜோதிட ரீதியாக ராகு பகவானின் தாக்கம் ஒருவருடைய ஜாதகத்தில் இருந்தால் அவரின் வாழ்க்கையில் சோதனைகள் அடுத்தடுத்து வரும் என்பது நம்பிக்கை. ராகு பகவான் எட்டு மாத காலத்தில் ஒரு நட்சத்திரத்திலிருந்து மற்ற நட்சத்திரத்திற்கு மாற்றம் அடைவார். 27 நட்சத்திரத்திற்கும் ராகு பகவான் ஒரு முழு சுழற்
ஜோதிட ரீதியாக ராகு பகவானின் தாக்கம் ஒருவருடைய ஜாதகத்தில் இருந்தால் அவரின் வாழ்க்கையில் சோதனைகள் அடுத்தடுத்து வரும் என்பது நம்பிக்கை. ராகு பகவான் எட்டு மாத காலத்தில் ஒரு நட்சத்திரத்திலிருந்து மற்ற நட்சத்திரத்திற்கு மாற்றம் அடைவார். 27 நட்சத்திரத்திற்கும் ராகு பகவான் ஒரு முழு சுழற்சி அடைவதற்கு 18 ஆண்டுகள் தேவைப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் ராகு பகவான் பெயர்ச்சி அடைந்த பிறகு எட்டு மாதத்தில் அடுத்த நட்சத்திரத்திற்கு மாறுவார் அடுத்து உத்திராடம் நட்சத்திரத்திற்கு வர 18 ஆண்டுகள் இருக்கும். ராகு பகவானின் இந்த நட்சத்திர மாற்றத்தால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படும் தற்போது ராகு பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் இருக்கிறார்.
சுக்கிரன் ராகு இணைவு
வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதி இரவு 8:37 மணிக்கு சுக்கிர பகவானும் அந்த நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக போகிறார். மேலும் ஜனவரி 28ஆம் தேதி மீன ராசியில் சுக்கிரன் மற்றும் ராகு என இரு கிரகங்களும் இணையப் போகிறார்கள். ஒரே நட்சத்திரம் மற்றும் ராசியில் சுக்கிரன் மற்றும் ராகு இணைவதால் இது ஜோதிட ரீதியாக ஒரு அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனால் மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அல்ல போகிறார்கள் அந்த ராசிகளை பற்றி விரிவாக காணலாம்.
மேஷ ராசி
ராகு மற்றும் சுக்கிர பகவானின் இணைவால் இந்த ராசிக்காரர்கள் அதிக பலன்களை பெறுவார்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நிறைவேறும். உடல்நிலை சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி பொருளாதார நிலையையும் மாற்றமடையும். வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பீர்கள் நீண்ட தூரமோ அல்லது வெளிநாட்டிற்கோ பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷப ராசி
சுக்கிரன் மற்றும் ராகு இணைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகமாகும். பணியிடத்தில் நீங்கள் பார்க்கும் வேலையால் முதலாளி மனமகிழ்ச்சி அடைவார். வேலையில் சம்பள உயர்வும் பதவி உயர்வும் பெரிய பொறுப்புகளும் தேடி வரும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுடைய சார்பாக போட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாகவே வரும். வணிகத்திலும் நல்ல லாபம் கிடைக்கும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு வெற்றி நிச்சயம் ஆக கிடைக்கும். செல்வாக்கானவர்களின் தொடர்பு ஏற்படும் குடும்பம் ஒற்றுமையாகும். குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா செல்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : குரு வக்ர பெயர்ச்சி 2025 பலன்கள்