உங்களை சுற்றி பண மழை கொட்ட வேண்டுமா ? இந்த ஒரு பொருளை தானம் செய்யுங்கள் போதும்!

பெரும்பாலும் நாம் இந்து கடவுள்களுக்கு உகந்த நாள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை என்று பலரும் சொல்வார்கள். ஆனால் நாம் வழிபடும் கடவுள்களில் பெரும்பாலான கடவுளுக்கு உகந்த நாள் என்றால் அது வியாழக்கிழமை தான். ஏன் விஷ்ணு பகவானை கூட மீத நாட்களை வழிபடுவதை விட வியாழக்கிழமை வழிபடுவது உங்களுக

By ·

பெரும்பாலும் நாம் இந்து கடவுள்களுக்கு உகந்த நாள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை என்று பலரும் சொல்வார்கள். ஆனால் நாம் வழிபடும் கடவுள்களில் பெரும்பாலான கடவுளுக்கு உகந்த நாள் என்றால் அது வியாழக்கிழமை தான். ஏன் விஷ்ணு பகவானை கூட மீத நாட்களை வழிபடுவதை விட வியாழக்கிழமை வழிபடுவது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். அந்த வகையில் வியாழக்கிழமை சில பொருட்களை நாம் தானம் கொடுத்தால் அது நம் வீட்டில் செல்வங்களை பெருக்கும் என சொல்வார்கள். அப்படி என்னென்ன பொருட்களை வியாழக்கிழமை தானம் கொடுக்கலாம் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

வியாழன்

ஏன் வியாழக்கிழமைக்கு அன்று கடவுள் வழிபாடு மிகவும் உன்னதமாக சொல்லப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா ? கோடான கோடி தேவர்களுக்கும் தேவ குருபாக விளங்குபவர் தான் பிரஜாபதி இவர் தேவர்களுக்கு மட்டும் குருவாக இல்லை ஒன்பது நவகிரகங்களில் இவரும் ஒருவர். இவர் வீற்றீருக்கும் கிரகம் தான் வியாழன் அதனால் எவர் ஒருவருக்கு பிரஜாபதியின் பரிபூரணமான அருள் கிடைக்கிறதோ அவர்களின் வாழ்வு வெற்றிகரமானதாக இருக்கும். எனவே வியாழக்கிழமைகளில் நீங்கள் செய்யும் தாணங்கள் இவரின் அருள் உங்களுக்கு கிடைக்க செய்யும். அதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள செல்வ வளம் பல மடங்காக பெருகும்.

மஞ்சள் துணி

இந்து புராணங்கள் படி மஞ்சள் நிறம் செல்வத்தை குறிப்பதாகவும் மேலும் வீட்டில் மங்களத்தை சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் வியாழக்கிழமை தினத்தன்று மஞ்சள் நிற துணியை யாருக்காவது தானமாக கொடுத்தால் உங்கள் வீட்டின் அதிர்ஷ்டமும் செல்லவும் பல மடங்காக வரும்.

மஞ்சள் நிற இனிப்புகள்

பொதுவாக சிவபெருமானுக்கு இனிப்புகள் வைத்து வழிபடுவது நல்ல பலனையை தரும். ஆதுவும் வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற வகை இனிப்புகளை வைத்து வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்க்கையும் இனிப்பாக மாறும். உங்களை சுற்றி உள்ள கெட்ட சக்திகளை அனைத்தையும் விரட்டியடித்து உங்கள் வாழ்வே தித்திப்பாக இருக்கும்.

வாழை மரம்

வியாழக்கிழமை அன்று நீங்கள் வாழை மர வழிபாடு செய்து வந்தால் உங்களுக்கு நீண்ட ஆயுள் காலமும் நல்ல உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். அதனுடன் மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் மஞ்சள் நிறம் உடைய துணியை வைத்து வழிபடுவது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

மஞ்சள் நிற ஆடை

அதேபோல் வியாழக்கிழமை தினம் என்று மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு பெரிதளவில் நன்மை செய்யாவிடிலும் உங்களை மனதளவில் மங்களகரமாகவே வைத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

விரதம்

வியாழக்கிழமை தினத்தன்று விரதம் இருந்து லட்சுமி தேவியை வழிபட்டு வந்தால் உங்களுக்கு குறைவில்லா செல்வத்தை அவள் கொடுப்பாள். மேலும் திருமணம் தடைபட்டுக் கொண்டிருப்பார்களுக்கு திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையும். உங்களால் வியாழக்கிழமை விரதம் கடைபிடிக்க முடியாவிட்டலும் பரவாயில்லை சாப்பாட்டில் போடும் உப்பின் அளவை மட்டுமாவது குறைத்துக் கொள்ளுங்கள்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை