தெய்வ வழிபாட்டில் தடை வராமல் இருக்க செய்ய வேண்டியவை!

ஒரு சிலர் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களுக்கு தூக்கம் வருவது மற்ற சிந்தனைகள் வருவது வழிபாட்டை முழுவதுமாக செய்ய முடியாமல் போவது என பல தடைகள் வரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மால் இறைவனுடைய பரிபூரணமான அருளை பெற முடியாது எனவே அதனை துவைப்பதற்கு செய்ய வேண்டிய சில ஆன

By Prem Kumar · 27/9/2024

ஒரு சிலர் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களுக்கு தூக்கம் வருவது மற்ற சிந்தனைகள் வருவது வழிபாட்டை முழுவதுமாக செய்ய முடியாமல் போவது என பல தடைகள் வரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மால் இறைவனுடைய பரிபூரணமான அருளை பெற முடியாது எனவே அதனை துவைப்பதற்கு செய்ய வேண்டிய சில ஆன்மீக தகவல்களை பற்றி பார்க்கலாம்.

தெய்வ வழிபாட்டில் தடை ஏற்படுவதற்கான காரணங்கள்

தெய்வ வழிபாட்டில் இருக்கும் போது தூக்கம் வருவதற்கு காரணம் உங்களை சுற்றி இருக்கும் உங்கள் வீட்டை தாக்கி இருக்கும் எதிர்மறையாற்றலும் கெட்ட சக்திகளும் தான் காரணம். இதற்கு முதலில் கெட்ட சக்திகளையும் எதிர்மறை ஆற்றலையும் வெளியேற்ற வேண்டும் அதற்கு வீட்டில் சாம்பிராணி தூபம் போட வேண்டும் பூஜை அறையில் துளசி இலையும் தர்ப்பைப்புல்லையும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

தெய்வ வழிபாட்டில் தூக்கம் வராமல் இருக்க செய்ய வேண்டியவை

தெய்வ வழிபாட்டில் இருக்கும் போது தூக்கம் வராமல் இருக்க கையில் ஒரு தர்ப்பை குச்சியை வைத்துக்கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் தர்ப்பை புல் விரிப்பு வாங்கி அதன் மேல் அமர்ந்து வழிபாடு செய்யும்போதும் மந்திரம் உச்சரிக்கும் போதும் நிச்சயமாக தூக்கம் வராது.

மேலும் பூஜை செய்வதற்கு முன்பாக வாயில் இரண்டு துளசி இலைகளை போட்டு நன்றாக சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்து விட்டாலும் தூக்கம் வராது இந்த இரண்டு விஷயங்களையும் பின்பற்றி தூக்கம் வருவதை தடுக்க முடியும்.

பூஜை சாமான்கள்

பொதுவாக நாம் வீட்டிற்கு நிறைய பொருட்களை வாங்கி குவித்து கொண்டு இருப்போம். முழுவதுமாக இறைவழிபாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பூஜை அறையில் நிறைய பூஜை சாமான்கள் வாங்கிக் கொண்டே இருப்பார்கள் ஆனால் அவ்வாறு வாங்கும் போது வேலை சற்று அதிகமாக இருக்கும். நாம் வாங்கி வைத்துள்ள பொருட்களை எல்லாம் வைத்து பூஜை செய்ய முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக கிடையாது படிப்படியாக உங்களுடைய பூஜை செய்யும் எண்ணங்கள் குறைந்து கொண்டே இருக்கும் எனவே உங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் வீட்டில் வாங்கி வைப்பது மிகவும் சிறந்தது. அதிலும் பூஜை அறையில் தேவையான பூஜை சாமான்களை மட்டுமே வாங்குவது குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுக்காது. நம்மால் இயன்றதை தெய்வத்திற்கு செய்து வழிபடும்போது அதற்கான பலன்கள் கட்டாயமாக நமக்கு கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : நவகிரக பாதிப்பை நீக்கக்கூடிய ஆஞ்சநேயர் வழிபாடு!

Recipes AMP · Quick view
View full