வீட்டில் அமைதியான சூழல் நிலவ ஒரு சில பொருட்களை மாற்ற வேண்டிய திசை!
வாஸ்து சாஸ்திரத்தின்படி நம்முடைய வீடு இருந்தால் தான் அதில் நல்லவைகள் நடக்கும் இல்லையென்றால் நமக்கு தொடர்ந்து பிரச்சினைகள் நிறைய நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை நாம் ஒரு சில திசைகளில் வைத்தால் தான் அந்த பொருள் நமக்கு பெருகும். ஒரு சில பொருட்களை தெற்கு திசையில
வாஸ்து சாஸ்திரத்தின்படி நம்முடைய வீடு இருந்தால் தான் அதில் நல்லவைகள் நடக்கும் இல்லையென்றால் நமக்கு தொடர்ந்து பிரச்சினைகள் நிறைய நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை நாம் ஒரு சில திசைகளில் வைத்தால் தான் அந்த பொருள் நமக்கு பெருகும். ஒரு சில பொருட்களை தெற்கு திசையில் வைக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் உள்ளது அதைப்பற்றி தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்
விளக்குகள்
பூஜை அறையில் நாம் விளக்கு ஏற்றி வழிபட்டால் தான் நமக்கு மனநிறைவு கிடைக்கும் ஆனால் நாம் ஏற்றும் அந்த விளக்கை வீட்டில் தெற்கு திசை நோக்கி ஏற்றக்கூடாது. வீட்டின் வளர்ச்சிக்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் குடும்பத்தின் ஆரோக்கியம் மேம்படமும் நாம் ஏற்றும் விளக்கை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி தான் ஏற்ற வேண்டும். தெற்கு திசை நோக்கி ஏற்றினால் வீட்டில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டு பல அசுப காரியங்களும் நடக்கும் எனவே தெற்கு திசையில் ஒருபோதும் விளக்கு ஏற்றாதீர்கள்.
தூங்கும் திசை
வீட்டிற்கு தெற்கு திசையில் பாதங்களை நீட்டி உறங்க கூடாது அதேபோல் தெற்கு திசை நோக்கி பூஜை அறையையும் வைக்கக் கூடாது அப்படி செய்வதால் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும் திருமண வாழ்வில் பல குழப்பங்கள் ஏற்படும். இவை வீட்டில் எதிர்மறையான தாக்கங்களை கொடுக்கும்.
காலணிகள்
பொதுவாக காலணிகளை நாம் வீட்டிற்கு வெளியே தான் கழட்டி விடுவோம். ஆனால் இப்பொழுதெல்லாம் காலணிகளை வீட்டிற்குள் கழட்டி விடுகிறார்கள் வீட்டிற்க்குள்ளும் பயன்படுத்துகிறார்கள் ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி காலணிகளை வீட்டிற்குள் பயன்படுத்துவது நல்லது கிடையாது அது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும். மேலும் காலணிகளை வீட்டின் தெற்கு திசையில் வைப்பதால் வீட்டில் பொருளாதார நிலைமை பாதிக்கப்படும் குடும்பத்திலும் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் வாழ்க்கையை எதிர்மறையாக மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
துளசி செடி
துளசி செடிகை இந்து மதத்தினர் கடவுளாக நினைத்து வணங்குவார்கள். ஆனால் துளசிச் செடியை வீட்டின் தெற்கு திசையில் ஒருபோதும் வைக்கக்கூடாது. அது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும் வீட்டில் பல குழப்பங்களை கொடுத்து சண்டைகளையும் கொடுக்கும் எனவே இந்த மாதிரியான சூழல்களை தவிர்க்க துளசி செடியை வீட்டில் கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் வைப்பது மிகவும் நல்லது
தெற்கு திசை நோக்கி வைக்க வேண்டிய பொருட்கள்
வீட்டில் தெற்கு நோக்கிய சுவரில் பீனிக்ஸ் பறவை போட்டோவை வைக்கலாம். அது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கும். தூங்கும்போது தலையை தெற்கு திசை நோக்கி வைப்பது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கும்.
வீட்டில் உள்ள விலகி இருந்த பொருட்களையும் தெற்கு திசை நோக்கி வைக்கலாம் அது வீட்டிற்கு வேறு மாதிரி ஆற்றலை கொடுத்து விலையுயர்ந்த பொருட்களை பெருக்கச் செய்யும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் தரித்திரம் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை!