மதியம் சுட சுட சாதத்துடன் போட்டு சாப்பிட தக்காளி கத்திரிக்காய் கடைசல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
தென் இந்திய உணவு வகைகளில் கத்தரிக்காய் தவிர்க்க முடியாதது. சாம்பார், கூட்டு, குழம்பு என ஏதாவது ஒரு ரூபத்தில் கத்தரிக்காயை பயன்படுத்துவோம். பலருக்கு கத்தரிக்காய் வாசம் இருந்தால்தான், சைவச் சாப்பாடு களை கட்டும். இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபி சைவ பிரியர்கள் அனைவருக்கும் மிகவும்
தென் இந்திய உணவு வகைகளில் கத்தரிக்காய் தவிர்க்க முடியாதது. சாம்பார், கூட்டு, குழம்பு என ஏதாவது ஒரு ரூபத்தில் கத்தரிக்காயை பயன்படுத்துவோம். பலருக்கு கத்தரிக்காய் வாசம் இருந்தால்தான், சைவச் சாப்பாடு களை கட்டும். இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபி சைவ பிரியர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த கத்திரிக்காவை வைத்துதான் பார்க்கப்போகிறோம். நாம் இன்று வரை கத்திரக்காவில் குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய் போன்றவை தான் செய்து சாப்பிட்டுருப்போம். ஆனால் இன்று பார்க்கப்போகும் ரெசிபியை ஒருமுறை செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இது கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, தேங்காய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான, தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க உணவு வகை. இது தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் மிகவும் பிரபலம். வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான கடைசல் செய்துவிடலாம். இது சாதத்திற்கு மட்டுமல்லாமல் இட்லி தோசைக்கும் மிகவும் சுவையாக இருக்கும்.
பொதுவாக தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவற்றிற்கு சட்னி, குருமா, சாம்பார் என்று தான் செய்வோம். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக கத்திரிக்காயை வைத்து ஒரு சட்னி போன்று கடைந்து அத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் வித்யாசமான சுவையிலும் இருக்கும். தினமும் ஒரே மாதிரி சட்னி சாப்பிட்டு போராகாமல் இருக்கலாம். கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்கள் கூட இந்த கத்தரிக்காய் கடைசலை விட்டு வைக்க மாட்டார்கள். அப்படி கிராமத்து வாசனை வீசும் சுவையான கத்தரிக்காய் கடைசல் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.