Advertisement
சைவம்

சாதத்தில் கலந்து சாப்பிட ருசியான தக்காளி இக்ரூ இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க அருமையாக இருக்கும்!

Advertisement

சப்பாத்தியுடன், சாதத்துடன் தக்காளி இக்ரூ சேர்த்து சாப்பிட்டால் எல்லோருக்குமே ரொம்பவும் பிடிக்கும். உருளைக்கிழங்கு மசாலாவை விட, அதிகம் விரும்பப்படும் இந்த தக்காளி இக்ரூ சப்பாத்திக்கு மட்டும் அல்லாமல் சாதத்துடன்  கூட சாப்பிடும் வகையில் டேஸ்டியாக செய்யலாம். தக்காளி இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகும். தக்காளியில் பீட்ட கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை தருகிறது.

தக்காளி குழம்பு , தொக்கு ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொருவர் முறைப்படி செய்வார்கள். அந்த வரிசையில் மிகவும் சுவையானவகையில், ஒரு காரசாரமான தக்காளி இக்ரூ எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisement

தக்காளி இக்ரூ | Tomato Curry Recipe In Tamil

Print Recipe
சப்பாத்தியுடன், சாதத்துடன் தக்காளி இக்ரூசேர்த்து சாப்பிட்டால் எல்லோருக்குமே ரொம்பவும் பிடிக்கும். உருளைக்கிழங்கு மசாலாவைவிட, அதிகம் விரும்பப்படும் இந்த தக்காளி இக்ரூ சப்பாத்திக்கு மட்டும் அல்லாமல் சாதத்துடன்  கூட சாப்பிடும் வகையில் டேஸ்டியாக செய்யலாம். தக்காளி
Advertisement
இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகும். தக்காளியில் பீட்ட கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை தருகிறது.
Course Breakfast, LUNCH, Side Dish
Cuisine tamil nadu
Keyword Tomato Ikru
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Advertisement
Servings 4
Calories 212

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 வெங்காயம்
  • 5 நன்கு பழுத்த தக்காளி
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • 3 பச்சைமிளகாய்
  • உப்பு தேவையான அளவு

அரைத்துக் கொள்ள

  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் தனியா
  • 8 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் மிளகாய்தூள்

தாளிக்க

  • 1/4 கப் எண்ணெய்
  • கறிவேப்பிலை சிறிது

Instructions

  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள்.
  • எண்ணெயைக் காய வைத்து கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும், சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்து, மிதமான தீயில் பச்சை வாசனை போகவதக்குங்கள்.
  • பிறகு தக்காளி, தேவையான உப்பு, சேர்த்து, நன்கு எண்ணெய் கசிந்து சுருளவதங்கும் வரை கிளறி, கடைசியாக அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டுஇறக்குங்கள்.
  • இதை சாதத்தில் கலந்து சாப்பிட செம டேஸ்ட்

Nutrition

Serving: 100g | Calories: 212kcal | Carbohydrates: 65g | Protein: 7g | Fiber: 9g | Calcium: 20mg | Iron: 5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 மணி நேரம் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

11 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

22 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago