மொறு மொறுவென்று தக்காளி மீன் வறுவல் இப்படி செய்து பாருங்கள் இதன் சுவை தூக்கலாக இருக்கும்!!!

பொதுவாக வார இறுதியில் ஞாயிற்று கிழமைகளில் அசைவ உணவு செய்து சாப்பிடுவோம். ஒரு சிலர் வாரத்திற்கு 2-3 முறை அசைவ உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று நீங்கள் உங்கள் வீட்டில் மீன் எடுத்துள்ளீர்களா? நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான மீன் வறுவல் செய்து சாப்பிடுகிறீர்

By ·

பொதுவாக வார இறுதியில் ஞாயிற்று கிழமைகளில் அசைவ உணவு செய்து சாப்பிடுவோம். ஒரு சிலர் வாரத்திற்கு 2-3 முறை அசைவ உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று நீங்கள் உங்கள் வீட்டில் மீன் எடுத்துள்ளீர்களா? நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான மீன் வறுவல் செய்து சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் அடுத்த முறை இப்படி தக்காளி மீன் வறுவல் செய்து பாருங்கள். மீன் வறுவல் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குழம்பு மீனை விட வறுத்த மீன் சாப்பிட தான் சிலருக்கு அதீத பிரியம். மீனை வறுத்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வித்தியாசமான முறையில் தக்காளி மீன் வறுவலை ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே சூப்பரான சுவையில் தக்காளி மீன் வறுவல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

மீன் உடலுக்கு மிகவும் ஏற்றது. மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்களான ஒமேகா 3 இதில் உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் விளங்குகிறது. மீன் என்றாலே வாசனை மிக்க குழம்பும், சாப்பிட சாப்பிட திகட்டாத வறுவலும் தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். அதனால் ஒரு காரசாரமான தக்காளி மீன் வறுவல் எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை