Advertisement
சைவம்

மணமணக்கும் சுவையான தக்காளி ரவா தோசை எப்படி செய்வது ?

Advertisement

நீங்கள் எப்பொழுதும் காலை இரவு என இரண்டு வேலையும் இட்லி, தோசை என ஒரே மாதிரியான டிபன் வகைகளை சாப்பிட்டு சாப்பிட்டு உங்களுக்கே சலித்து போய் இருக்கும். ஒரு மாறுதலுக்காக நீங்கள் ரவா தோசை தயார் செய்து சாப்பிடலாம் இருந்தாலும் அதையும் பெரும்பாலும் நீங்கள் அனைவரும் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆகையால் இன்று வித்தியாசமான முறையில் தக்காளி ரவா தோசை செய்வது பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : மொறு மொறுனு ரவா தோசை செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் இந்த தக்காளி ரவா தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மேலும் இரண்டு தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு டிபன் உணவாக மாறிப்போகும் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இந்த தக்காளி ரவா தோசை இருக்கும். அதனால் இன்று இந்த தக்காளி ரவா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தக்காளி ரவா தோசை | Tomato Rava Dosai Recipe in Tamil

Print Recipe
இன்று வித்தியாசமான முறையில் தக்காளி ரவா தோசை செய்வது பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த தக்காளி ரவா தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மேலும் இரண்டு தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு டிபன் உணவாக மாறிப்போகும் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இந்த தக்காளி ரவா தோசை இருக்கும். அதனால் இன்று இந்த தக்காளி ரவா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Dosai, தோசை
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 80

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

மிக்ஸியில் அரைக்க

  • 3 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 3 வர மிளகாய்

மாவு தயார் செய்ய

  • 1 கப் வெள்ளை ரவா
  • 1 கப் அரிசி மாவு
  • ½ கப் கோதுமை மாவு
  • உப்பு தேவையான அளவு
  • 2 டம்பளர் தண்ணீர்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  • 3 பச்சை மிளகாய் நறுக்கியது
  • 1 கொத்து கருவேப்பிலை நறுக்கியது
  • 1 கொத்து கொத்த மல்லி நறுக்கியது
  • ½ tbsp மிளகு இடித்தது
  • ½ tbsp சீரகம்

Instructions

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய முன்று தக்காளி, முன்று வர மிளகாய் மற்றும் ஒரு துண்டு சிறிய இஞ்சி சேர்த்து மை போல நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு பெரிய பவுள் எடுத்துக் கொண்டு அதில் நாம் அரைத்த தக்காளியை சாறை ஊற்றி கொள்ளவும்.
  • பின் இதனுடன் ஒரு கப் வெள்ளை ரவா, ஒரு கப் அரிசி மாவு மற்றும் அரை கப் கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்
    Advertisement
    இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு இந்த மாவை ஒரு 15 நிமிடங்கள் தொடாமல் தனியாக ஊற வைத்து விடுங்கள். பின் இந்த மாவுடன் நாம் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும்.
  • பின் ரவா தோசைக்கு மாவு எப்பொழுதும் தண்ணீர் பதத்திற்கு இருக்க வேண்டும், ஆகையால் இன்னொரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மாலை தண்ணீர் போல் ஆக்கிக் கொள்ளவும். பின் அரை டீஸ்பூன் இடித்த மிளகு மற்றும் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசைக்கல் சூடானதும் ஒரு முறை மாவை நன்றாக கலந்து கொண்டு இடைவெளிகள் இல்லாமல் தோசையை ஊற்றிக் கொள்ளவும் பின்பு தோசை ஒரு பக்கம் பொன்னிறமாக வந்தவுடன் திருப்பி போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேக விடவும்.
  • பின் தோசையின் இரு பக்கமும் பொன்னிறமாக வந்தது எடுத்துக் கொள்ளவும். பின் இப்படியாக மீதம் இருக்கும் மாவை நன்றாக கலக்கி கலக்கி ஊற்றிக் கொள்ளவும் அவ்வளவுதான் சுவையான தக்காளி ரவா தோசை இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4people | Calories: 80kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Fat: 3.22g | Saturated Fat: 1.2g | Cholesterol: 16mg | Potassium: 256mg | Sugar: 5.6g

English Overview : tomato rava dosai is one of the most important dishes in india. tomato rava dosai recipe or tomato rava dosai seivathu eppadi or tomato rava dosai recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

9 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

11 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

12 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

13 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

17 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

17 மணி நேரங்கள் ago