பருப்பில்லாதே நேரங்களில் ரோட்டு கடை ஸ்டைல் தக்காளி சாம்பார் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

என்னதான் வித விதமான டிபன் வெரைட்டி இருந்தாலும் நம் வீடுகளில் அதிகம் செய்யும் உணவு இட்லி, தோசை தான், அதுவும் பெரும்பாலான வீடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் காலையில் சமைக்கும் உணவு இட்லி தான். குழம்பு, சட்னி, வறுவல் போன்ற எந்த உணவு செய்வதாக இருந்தாலும் வெங்காயம், தக்காளி இல்லாமல்

By ·

என்னதான் வித விதமான டிபன் வெரைட்டி இருந்தாலும் நம் வீடுகளில் அதிகம் செய்யும் உணவு இட்லி, தோசை தான், அதுவும் பெரும்பாலான வீடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் காலையில் சமைக்கும் உணவு இட்லி தான். குழம்பு, சட்னி, வறுவல் போன்ற எந்த உணவு செய்வதாக இருந்தாலும் வெங்காயம், தக்காளி இல்லாமல் உணவு தயார் செய்ய முடியாது. அதுபோல் தான் சாம்பாரும். பொதுவாக நாம் வீடுகளில் இட்லி தோசை என்றாலே சாம்பார்தான். ஆனால் இட்லி தோசை மட்டும் அல்ல சாதம், சப்பாத்தி, பூரி என எதுவாக இருந்தாலும் இப்படி ஒரு சாம்பார் மட்டும் வச்சு கொடுத்து பாருங்க உங்கள் வீட்டில் இருக்கும் எல்லோருக்கம் மிகவும் பிடிக்கும்.

இட்லி, தோசைக்கு பொதுவாக கடகடவென சட்னி அரைப்பது வழக்கம். ஆனால் சட்னி வகைகள் சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு எளிதாக செய்யக்கூடிய இந்த சாம்பார் செய்து கொடுத்தால் கூடுதலாக 2 இட்லியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சாம்பார் என்றாலே அது பருப்பில் தான் செய்ய முடியும். ஆனால் இந்த தக்காளி சாம்பார் செய்ய பருப்பு அவசியமில்லை. கிட்டத்தட்ட இதுவும் சட்னி போல தான். ரோட்டுக்கடையில் இட்லி, பொங்கலுடன் இந்த சட்னி அதிகம் பரிமாறப்படும். சற்று காரம் தூக்கலாக, தக்காளி புளிப்புடன் டேஸ்டில் சூப்பராக இருக்கும். ரெட் கலரில் இருக்கும் இந்த சட்னிக்கு பெயர் தான் தக்காளி சாம்பார்.

இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், உப்புமா என அனைத்து வகையான பிரேக் ஃபாஸ்ட் உணவுகளுக்கும் இந்த சட்னி செட் ஆகும். முக்கியமாக இது சீக்கிரம் செய்யக்கூடிய வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டிருக்கும். பேச்சுலர்களும் இந்த தக்காளி சாம்பாரை முயற்சி செய்யலாம். இந்த சாம்பார் செய்வதற்கு காய்கறிகள் எதுவும் தேவையில்லை. வெறும் வெங்காயம், தக்காளி இருந்தாலே போதுமானது. முக்கியமாக இந்த சாம்பார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேகமாக செய்யும் வகையில் ஈஸயாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் ‌: ருசியான குதிரைவாலி சாம்பார் சாதம் காலை டிபனுக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full