Advertisement
அசைவம்

எவ்வளவு செய்தாலும் காலியாகும் ஸ்நாக்ஸாக டூனா மீன் வடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

பலருக்கும் மாலை நேரத்தில் தேநீர் அருந்தும் போது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உண்டு. அப்படி நாம் எடுத்துக் கொள்ளும் ஸ்நாக்ஸ் பெரும்பாலும் வடை பஜ்ஜி போண்டா இப்படித் தான் இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே வித்தியாசமான ஒரு அசைவ ஈவினிங் ஸ்னாக்ஸ் , டூனா மீன் வடைபற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

டூனா மீனில் இயற்கையான ஒமேகா-3 – கொழுப்பு அமிலம் போன்றவை அதிகமாக உள்ளது, இது உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கிறது, டூனா மீன் புரதச்சத்து மிகுதியாக இருக்கிறது. அதுவும் கொழுப்புச்சத்து குறைந்த புரதச்சத்துக்களை உடையதாக இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு டூனா மீன் சிறந்த உணவாகும்.

Advertisement

மீனை குழம்பு, வறுவல் என விதவிதமாக சமைத்திருப்பீர்கள். ஆனால் மீனில் வடை செய்திருக்கிறீர்களா?  மீன் வடை ஹோட்டல்களில் கூட பெரும்பாலும் கிடைக்காது.. மீன் விரும்பி ருசிப்பவர்கள் நிச்சயம் மீன் வடை சாப்பிட்டு பாருங்கள். டூனா மீன் வடை சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக இருக்கும். இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி மசாலா சேர்த்து டூனா மீனை வடை செய்து கொடுத்தால் அந்த மீனின் வாடை எதுவும் இல்லாமல் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாங்க தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

டூனா மீன் வடை | Tuna Fish Vada Recipe In Tamil

Print Recipe
பலருக்கும் மாலை நேரத்தில் தேநீர் அருந்தும் போது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உண்டு. அப்படிநாம் எடுத்துக் கொள்ளும் ஸ்நாக்ஸ் பெரும்பாலும் வடை பஜ்ஜி போண்டா இப்படித் தான் இருக்கும்.இந்த சமையல்
Advertisement
குறிப்பு பதிவில் ரொம்பவே வித்தியாசமான ஒரு அசைவ ஈவினிங் ஸ்னாக்ஸ் , டூனாமீன் வடைபற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். மீனை குழம்பு,வறுவல் என விதவிதமாக சமைத்திருப்பீர்கள். ஆனால் மீனில் வடை செய்திருக்கிறீர்களா?  மீன் வடை ஹோட்டல்களில் கூட பெரும்பாலும் கிடைக்காது..மீன் விரும்பி ருசிப்பவர்கள் நிச்சயம் மீன் வடை சாப்பிட்டு பாருங்கள். டூனா மீன் வடைசாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும்
Advertisement
ருசியாக இருக்கும். இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படிமசாலா சேர்த்து டூனா மீனை வடை செய்து கொடுத்தால் அந்த மீனின் வாடை எதுவும் இல்லாமல்மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாங்க தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Tuna Fish Vada
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 187

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 300 கிராம் டூனா மீன்
  • 1 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 கப் கடலைப்பருப்பு
  • 1 தேக்கரண்டி கார்ன் ஃப்ளார் தேவைப்பட்டால்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • டூனா மீன் சதையை மட்டும் கொறகொறப்பாக அரைத்து கொள்ளவும். கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊறவிடவும்.
  • ஊற வைத்த கடலைப் பருப்புடன் பச்சை மிளகாய், சோம்பு மற்றும் உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
  • உதிர்த்து வைத்துள்ள டூனா மீனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்புச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • தேவைப்பட்டால் அத்துடன் கார்ன் ஃப்ளாரைச் சேர்த்து கொள்ளவும்
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மீன் கலவையை வடைகளாகத் தட்டி போட்டு வெந்ததும் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.
  • சுவையான டூனா மீன் வடை தயார்

Nutrition

Serving: 2ns | Calories: 187kcal | Carbohydrates: 12g | Saturated Fat: 2.5g | Sodium: 61mg | Potassium: 384mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…

24 நிமிடங்கள் ago

கருங்காலி மாலை அணிய வேண்டிய ராசிக்காரர்கள்

பொதுவாக ஆன்மீகத்தில் பலரால் நம்பப்பட்ட ஒரு சில விஷயங்கள் ஒரு சில காலகட்டத்தில் மிகவும் சுவாரசியமாக பேசப்படும். அதேபோல் ஆன்மிகத்தை…

29 நிமிடங்கள் ago

முலாம்பழ சர்பத் இந்த வெயிலுக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

முலாம்பழம் வச்சு சர்பத்தா அப்படின்னு யோசிக்கிறீங்களா! ஆமாங்க முலாம் பழம் வச்சு சூப்பரான இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு சுவைல…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் காளான் கொத்துக்கறி இப்படி செய்து கொடுத்து பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

வீட்ல விரதம் இருந்தாலோ புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடல அப்படின்னாலும் அந்த நேரங்கள்ல நம்ம காளான் சோயா காலிஃப்ளவர் இத…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் இழப்புகளை சந்திக்க நேரிடும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவதைத்…

6 மணி நேரங்கள் ago

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

19 மணி நேரங்கள் ago