கர்நாடகா ஸ்பெஷல் உடுப்பி ரசம் ருசியாக இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
ரசம் நாம் தினமும் உணவில் கட்டாயம் சாப்பிடும் ஒன்றாகும். ரசத்தை செய்வதற்கு சில நிமிடங்களே போதுமானது. அதுமட்டுமின்றி ஒரு ரசத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. நமது உணவு கலாச்சாரத்தில் ரசம் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் பொருட்களை க
ரசம் நாம் தினமும் உணவில் கட்டாயம் சாப்பிடும் ஒன்றாகும். ரசத்தை செய்வதற்கு சில நிமிடங்களே போதுமானது. அதுமட்டுமின்றி ஒரு ரசத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. நமது உணவு கலாச்சாரத்தில் ரசம் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் பொருட்களை குறிப்பிடலாம். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, மல்லித்தூள், பெருங்காயம் மற்றும் புளிக்கரைசல் போன்றவை மருத்துவ குணம் வாய்ந்தவையாக உள்ளன. இதில் சேர்க்கப்படும் புளிக்கரைசல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.
ரசம் காய்ச்சல், இருமல், தும்மல், உடல் சோர்வு, உடல் களைப்பு, செரிமானப் பிரச்சனை, சத்துகுறைபாடு, தொண்டை கமறல், வயிற்று புண் என அனைத்து நோய்களுக்கும் மருந்தாக உள்ளது. உங்களை நோய் தொற்றில் இருந்து காத்து, உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ரசம் மட்டும் பிடிக்காதவர்களை பார்க்க முடியாது. ரசம் மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம். ஒரு சூப்பர் சுவையான ரசம் இருந்தால் போதும். அது உங்களுக்கு ஒரு விருந்து சாப்பிட்ட உணர்வைத்தரும்.
ரசத்துடன் உருளைக்கிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட்டால், எப்படியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கும் போதே வாய் ஊறுகிறது. அந்த வகையில் ரசத்தில் பல வகைகள் உள்ள நிலையில், உடுப்பி ஸ்டைல் ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதுவரை எத்தனையோ ஸ்டைலில் ரசம் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் உடுப்பி ஸ்டைல் ரசத்தை சுவைத்ததுண்டா? ஆம், இந்த ஸ்டைல் ரசமானது அட்டகாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
ஒரு முறை இந்த ஸ்டைலில் ரசம் செய்து விட்டால் போதும் அடுத்தமுறை எல்லாம் இந்த ஸ்டைலில் தான் செய்வீர்கள். உங்களால் பெரிதாக ஒன்றும் சமைக்கக் கூட முடியவில்லையென்றாலும், அப்பளத்துடன் சாப்பிட சுவை அள்ளும். குறிப்பாக பணி செல்பவர்களுக்கு இது நல்ல தேர்வு. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உடுப்பி ஸ்டைல் ரசப்பொடியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அவசரமான காலங்களில் உதவியாக இருக்கும். இப்ப வாங்க சுவையான உடுப்பி ஸ்டைல் ரசம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : எலுமிச்சை ரசம் செய்வது எப்படி