பாரம்பரிய ருசியில் உப்புகண்டம் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க! இதன் டேஸ்ட் வேற லெவலா இருக்கும்!
உப்பு கண்டம் அப்படின்னா என்னன்னு நிறைய பேருக்கு தெரியாம இருக்கும். உப்பு கண்டம் அப்படிங்கறது மீன்ல எப்படி கருவாடு இருக்கோ அதே மாதிரி ஆட்டுக்கறியில் செய்யறது தான் உப்பு கண்டம். நிறைய பேர் இந்த உப்பு கண்டம் இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க நிறைய பேருக்கு அது சாப்பிட்டு அன
உப்பு கண்டம் அப்படின்னா என்னன்னு நிறைய பேருக்கு தெரியாம இருக்கும். உப்பு கண்டம் அப்படிங்கறது மீன்ல எப்படி கருவாடு இருக்கோ அதே மாதிரி ஆட்டுக்கறியில் செய்யறது தான் உப்பு கண்டம். நிறைய பேர் இந்த உப்பு கண்டம் இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க நிறைய பேருக்கு அது சாப்பிட்டு அனுபவம் இருக்கும்.
இந்த உப்பு கண்டத்தை எப்படி செய்றது அப்படினா வருஷத்துக்கு ஒரு தடவை சிலர் வீட்ல ஆடு எடுத்து வெட்டி வீட்டிலேயே செய்வாங்க. அப்படி செய்யும்போது சமையலுக்கு போக அதுல நிறைய கறி என்ன பண்ணுவாங்கன்னா மஞ்சள் தூள் உப்பு போட்டு பிசறி நல்ல வெயில்ல காய வச்சு எடுத்து வச்சிருப்பாங்க.
அது வருஷம் பூராவுமே நம்ம சாப்பாட்டுக்கு யூஸ் பண்ணி சாப்பிடலாம். ரொம்பவே சுவையா இருக்கும். அப்படி அந்த உப்புக்கண்டத்தை யூஸ் பண்ணி இன்னைக்கு நம்ம ஒரு தொக்கு செய்ய போறோம். இந்த தொக்கு பழைய சாதத்தோடையும் தயிர் சாதத்தோடையும் சாப்பிடறப்போ அவ்ளோ ருசியா இருக்கும்.
மத்த சாதத்தோட சேர்த்து சாப்பிட்டுக்கலாம் ஆனாலும் இந்த மாதிரி பழைய சாதத்துக்கும் தயிர் சாதத்துக்கு சாப்பிடும் பொழுது அந்த உப்புகண்டம் தொக்கு டேஸ்ட்டே வேற லெவலா இருக்கும். சரி வாங்க இந்த உப்புக்கண்டம் தொக்கு எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.