குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக ஏதேனும் செய்து கொடுக்க விரும்பினால் இந்த உளுந்து லட்டு செய்து கொடுங்கள்!!

லட்டு ‌பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. அந்த வகையில் உளுந்தம் பருப்பு வைத்து சுவையான லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குற

By Prem Kumar · 20/1/2026

லட்டு ‌பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. அந்த வகையில் உளுந்தம் பருப்பு வைத்து சுவையான லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். தானிய வகையைச் சேர்ந்த கருப்பு உளுந்து உங்களின் செரிமானத்தை மேம்படுத்த உதவும். குடலின் இயக்கத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை நிவர்த்தி செய்யவும் உதவும் மூலப்பொருட்கள் கருப்பு உளுந்தில் உள்ளன.

அதுமட்டுமின்றி, வயிற்றுப்போக்கை எதிர்த்துப் போராட கருப்பு உளுந்து உதவுகிறது. கருப்பு உளுத்தம் பருப்பில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால், அவை உடலில் உள்ள ஆற்றலை அதிகரிக்க சிறந்ததாகும். இப்படிப்பட்ட கருப்பு உளுந்தில் லட்டு செய்யும் போது, அந்த லட்டு சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. சொல்லப்போனால் வழக்கமாக செய்யும் லட்டுவை விட இப்படி லட்டு செய்தால், இதுவரை கருப்பு உளுந்து விரும்பி சாப்பிடாதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த லட்டு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. மேலும் இதனை அனைத்து விஷேஷ தினங்கள், வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், சுப தினங்கள் போன்றவற்றின் போது வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான உளுந்து லட்டு எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : கோதுமை பேரிச்சம் பழ லட்டு

Recipes AMP · Quick view
View full