வரலட்சுமி வீட்டிற்கு வர செய்ய வேண்டிய சில வழிமுறைகள்
பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் காலை முதல் மாலை வரை கடினமாக உழைத்து சம்பாதித்து வருகிறோம் ஆனால் எவ்வளவுதான் உழைத்து பணம் சம்பாதித்தாலும் அந்த பணம் நம் கையில் தங்குவதற்கு யோகம் வேண்டும் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் நேர்மையாக உழைத்தாலும் அதற்கேற்ற பலனை நம்மால் பெற ம
பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் காலை முதல் மாலை வரை கடினமாக உழைத்து சம்பாதித்து வருகிறோம் ஆனால் எவ்வளவுதான் உழைத்து பணம் சம்பாதித்தாலும் அந்த பணம் நம் கையில் தங்குவதற்கு யோகம் வேண்டும் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் நேர்மையாக உழைத்தாலும் அதற்கேற்ற பலனை நம்மால் பெற முடியவில்லை என்ற வருந்துபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒரு சிலர் எந்த வேலையும் செய்யாமல் அதிகமாக பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருப்பார்கள் அதற்கு காரணம் மகாலட்சுமி தேவியாரின் அருள் அவர்களுக்கு பரிபூரணமாக இருக்கும் அப்படி மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்க செய்ய வேண்டிய சில வழிமுறைகளைப் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்
வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி
ஒரு சிறிய செயலை செய்வதன் மூலமாக பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்றால் தயங்காமல் அந்த செயலை நாம் செய்வோம் நம்மை அறியாமலேயே நாம் செய்யக்கூடிய அந்த சிறிய செயலுக்கான பலன் பல மடங்கு நமக்கு கிடைக்கும் அந்த வகையில் ஒரு சூட்சமமான வழிமுறையை ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம் மகாலட்சுமி தேவியாரை வீட்டிற்கு அழைப்பதற்கு செய்ய வேண்டிய இந்த வழிமுறையை பின்பற்றினால் போதும் நிச்சயமாக மகாலட்சுமி தேவியார் வீட்டிற்கு வருவார்
மகாலட்சுமி தேவியார்- சஞ்சலா
மகாலட்சுமி தேவியார் ஒரு இடத்தில் நிலையாக இருக்க மாட்டாள் அஷ்டலட்சுமி ஒரு சேர இருக்கக்கூடிய மகாலட்சுமி தேவியாருக்கு 8 கால்கள் இருக்கிறது மகாலட்சுமி தேவியாரை சஞ்சலா என்றும் அழைப்பார்கள். சஞ்சலா என்பதற்கு ஒரு இடத்தில் நிரந்தரமாக இருக்க மாட்டாள் என்பதுதான் பொருள் அப்படிப்பட்ட மகாலட்சுமி தேவியாரை நாம் வீட்டிற்கு அழைத்து வந்தால் நிரந்தரமாக நம் வீட்டிலேயே தங்கி விடுவாள் என்பது தவறு மகாலட்சுமி தேவியாரை நாம் தினமும் வழிபட்டு பூஜையில் செய்தாலும் கூட அவள் வீட்டை விட்டு செல்வதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. எனவே மகாலட்சுமி தேவியாரை நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பதற்கு நம் வீட்டில் சந்தோஷம் நினைப்பதற்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த ஒரு தாந்திரீக பரிகாரத்தை செய்ய வேண்டும்
மகாலட்சுமி தேவியார் வீட்டில் தங்குவதற்கு செய்ய வேண்டியவை
இந்த தாந்திரீக பரிகாரத்திற்காக நாம் பணம் செலவழிக்க தேவையில்லை தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் முகம் கழுவி விட்டு நம்முடைய வீட்டு வாசலை திறக்கும் போது ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் வீட்டிற்கு இரண்டு வாசல்கள் இருந்தால் முதலில் கொல்லைப்புறத்தில் இருக்கக்கூடிய வாசலை திறந்து விட்டு பிறகு தான் முன்வாசலை திறக்க வேண்டும். காரணம் முதலில் பின் வாசலை திறந்தால் வீட்டில் இரவு முழுவதும் தங்கி இருந்த எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறிவிடும். அதன் பிறகு முன் வாசலை திறந்தால் நேர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வரும் மேலும் வரலட்சுமி வருக வருக என்று மூன்று முறை கூறும் போது நம் வாசலில் மகாலட்சுமி தேவியார் இருந்தால் நம்முடைய வீட்டிற்கு வந்து நமக்கு அனைத்து விதமான நன்மைகளையும் கொடுப்பார். முழு மனதோடு மகாலட்சுமி தேவியாரை நினைத்துக் கொண்டு மகாலட்சுமியை அழைக்க வேண்டும்.மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை 48 நாட்கள் தொடர்ச்சியாக செய்தால் நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நடக்கும் மகாலட்சுமி தாயார் உங்கள் வீட்டிற்குள் எப்பொழுதுமே நிலையாக இருப்பாள்