வீட்டில் பண மழை கொட்ட வேண்டுமா? இந்த ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் போதும்!!
சம்பளப்பணம் வாங்கிய நிமிடத்திலே ஏராளமான செலவுகள் வரிசை கட்டி நிற்கும்.சில நாட்களிலேயே பணம் செலவாகி விடுவதால் அன்றாட செலவுகளுக்கு சிலர் அல்லல் பட வேண்டியிருக்கும். அதிர்ஷ்டம் வர வேண்டும், பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. இதற்காக நமக்கு தெரிந்து அனை
சம்பளப்பணம் வாங்கிய நிமிடத்திலே ஏராளமான செலவுகள் வரிசை கட்டி நிற்கும்.சில நாட்களிலேயே பணம் செலவாகி விடுவதால் அன்றாட செலவுகளுக்கு சிலர் அல்லல் பட வேண்டியிருக்கும். அதிர்ஷ்டம் வர வேண்டும், பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. இதற்காக நமக்கு தெரிந்து அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்து பார்ப்போம். பணத்தை ஈர்க்கவும், வீட்டில் செல்வத்தையும் பணத்தையும் தக்கவைக்கவும் சில சூட்சும ரகசியங்கள் உள்ளன. வாஸ்து சாஸ்திரப்படியும், ஜோதிட சாஸ்திரப்படியும் வீட்டில் சில செடிகளை வைத்து வளர்ப்பதால் பண வரவும், அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் தேடி வரும். வீட்டில் வைக்கும் செடிகள் பணத்தை ஈர்க்கும் சக்தி படைத்தவை. வீட்டில் பாசிடிவ் எனர்ஜியை அதிகரிக்க செய்யும். அப்படி வீட்டில் உள்ள கடன் பிரச்சனைகளை சரி செய்து செல்வத்தை செழிக்க வைக்கும் ஒரு வாஸ்து செடி பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.
குபேர செடி
குபேரச் செடி என்பது பொதுவாக ஜேட் செடி என்று அழைக்கப்படும் கிராசுலா செடியைக் குறிக்கிறது. ஆன்மீக ரீதியாக குபேர செடி என்பது செல்வம், அதிர்ஷ்டம், நிதி வளம் ஆகியவற்றை ஈர்க்கும் தன்மை கொண்டது என்று நம்பப்படுகிறது. இந்து நம்பிக்கைகளின் படி, குபேரன் செல்வத்தின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். குபேரனின் அருள் இருந்தால் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்று நம்பப்படுகிறது. குபேரனுக்கு பிடித்தமான கிராசுலா செடியை வீட்டில் வைத்தால் செல்வம் இரட்டிப்பாகும். குபேர வழிபாடுகளுடன், இந்த செடியை வைத்திருந்தால் நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் அழிந்து ஆன்மீக சக்திகள் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் நிதி பற்றாக்குறை, கண் திருஷ்டிகள் விலகும் என நம்பப்படுகிறது. இது குடும்பத்தில் செல்வத்தையும் ஒற்றுமையையும் கொண்டுவரும்.
குபேர செடியை எந்த திசையில் வைக்க வேண்டும்?
பொதுவாக குபேரச் செடியை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும். இந்த திசைகளில் வைத்தால் நம்முடைய செல்வத்தை ஈர்ப்பதாகவும், நேர்மறை ஆற்றலை பெருக்கும் என்றும் நம்பப்படுகிறது. குபேர பகவான் செல்வத்தின் அதிபதியாவார், மேலும் அவருக்கு மிகவும் உகந்த திசை வடக்கு திசையாகும். அதனால் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைத்தால் நல்லது. இல்லையெனில் இந்த செடியை வீட்டின் நுழைவாயிலில் அல்லது பூஜையறையில் வைக்கலாம்.
எங்கே வைக்க கூடாது?
குபேர செடியை குளியலறை, சமையலறை, படுக்கையறை, மரங்கள் சுற்றியுள்ள பகுதி, நேரடி வெப்பம் மற்றும் அதிக வெப்பம் பெறும் இடங்களில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த இடங்களில் நாம் செடியை வைத்தால் நேர்மறை ஆற்றலைக் குறைத்து, செல்வ செழிப்பைத் தடுக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த செடியை தென்கிழக்கு திசை நோக்கி வைக்கவே கூடாது. தென்கிழக்கு திசையை அக்னி திசை என்று அழைப்பர், இந்த இடத்தில் குபேரச் செடியை வைப்பது பண வரவைக் குறைக்கும்.
குபேர செடியை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
குபேரச் செடியை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும், கடன் தொல்லைகள் நீங்கும், நிதி ஸ்திரத்தன்மை ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வமும் அதிகரிக்கும், வாஸ்து தோஷங்கள் நீங்கும், சுக்கிரன் பலப்படும், மன அழுத்தம் குறைந்து, நிம்மதி தரும் மேலும் வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையை வலுப்படுத்த குபேரச் செடியை வளர்ப்பது உதவும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே இது எதிர்மறை ஆற்றலை நீக்கி, வாழ்க்கை தரம் மேம்பட உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த செடியை தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் தொழிலில் அதிக வாய்ப்புகளையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.
இதனையும் படியுங்கள் : செல்வம் சேர வீட்டில் வைக்க வேண்டிய செடிகள்